கன்னியாகுமரி: பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலையன் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை, ஆவணி, மார்கழி, மாசி, மாதங்களில் தேர் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் ஆவணி மாத தேர் திருவிழா செப்.3ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பத்து நாள் திருவிழாவில் ஒவ்வொரு நாளும் தாணுமாலையனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், வீதி உலா அழைத்து வருதல் உள்ளிட்டவை நடந்தன.
இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆவணி தேர் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. அதில் திராளான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டு சப்பரத்தை வடம் பிடித்து இழுத்தனர். பெருமாள், ஸ்ரீதேவி பூதேவி ஆகியோர் இந்திரன் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இந்த விழா நாளை ஆராட்டு திருவிழாவோடு நிறைவு பெறுகிறது.
இதையும் படிங்க: சோழர் கால ஒற்றை வார்ப்பு முறையில் 23 அடி உயர நடராஜர் சிலை