கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் உள்ள முக்கிய சந்திப்பு பகுதியில் ஆவின் பால் பூத், பலசரக்கு கடை, எழுதுபொருள் கடை மற்றும் மருந்தகம் என நான்கு கடைகள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், நேற்றிரவு (நவம்பர் 21) இந்த நான்கு கடைகளிலும் அடையாளம் தெரியாத நபர்கள், பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். இதையடுத்து காலையில் கடைக்கு வந்த உரிமையாளர்கள் பூட்டு உடைந்திருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவலதுறையினர், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கொண்டு குற்றவாளிகளை தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க:அரூரில் சந்தன மரம் வெட்டிய இருவர் கைது!