கன்னியாகுமரி மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் அதிகளவில் லஞ்சம் பெறப்படுவதாக நாகர்கோவில் லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் நாகர்கோவில், மார்த்தாண்டம் ஆகிய இடங்களில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வாகன ஆய்வாளராக பணியாற்றும் பெருமாள் என்பவர், லஞ்சமாக பெற்ற பணத்துடன் மார்த்தாண்டத்தில் இருந்து நெல்லைக்கு சென்று கொண்டிருப்பதாக நாகர்கோவில் லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது.
![வாகன ஆய்வாளரிடம் லஞ்சம் ஒழிப்புத் துறையினர் ரூ.1.60 லட்சம் பறிமுதல்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/03:44:39:1605867279_tn-knk-02-vijilence-raid-script-tn10005_20112020152933_2011f_1605866373_980.jpg)
அதன்பேரில், லஞ்ச ஒழிப்பு துறையினர் நாகர்கோவில் வடசேரி அண்ணா சிலை முன்பு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த பெருமாளின் காரை நிறுத்தி சோதனை செய்தனர். இந்த சோதனையின்போது, காரில் ஒரு லட்சத்து 69 ஆயிரம் ரூபாய் லஞ்சப் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து பணத்தை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்புத் துறையினர், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.