ETV Bharat / state

"திமுக ஆளுநரை வில்லனாக சித்தரிக்கிறது": அண்ணாமலை

திமுக திரைப்பட அரசியல் செய்து கொண்டிருக்கிறது, 'திரைப்படத்தில் நடிகர்களுக்கு வில்லன்கள் இருப்பது போல் ஆளுநரை வில்லனாக சித்தரிக்கிறது' என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

"திமுக ஆளுநரை வில்லனாக சித்தரிகிறது": அண்ணாமலை

author img

By

Published : Jan 14, 2023, 12:19 PM IST

Updated : Jan 14, 2023, 12:35 PM IST

"திமுக ஆளுநரை வில்லனாக சித்தரிக்கிறது": அண்ணாமலை

கன்னியாகுமரி: அருமனையில் வட்டார இந்துசமுதாயம் சார்பில் 19-வது ஆண்டு பொங்கல் விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை கூறுகையில், "சட்டமன்றத்தில் காங்கிரஸ், திமுக எம்எல்ஏக்கள் ராமாயணம் என்பது கற்பனை கதை எனவும் ராமர் கட்டுகதை எனவும் கூறி இந்துமக்கள் மனதை புண்படுத்தியுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலிருத்து வெற்றி பெற்று சென்ற காங்கிரஸ், திமுக எம்.எல்.ஏக்கள் இந்துமக்களிடம் பொதுமன்னிப்பு கேட்கும் வரை, இந்த பிரச்னையை விடப்போவதில்லை.

தனக்கு வழங்கப்பட்ட இசட் (Z) பிரிவு பாதுகாப்பு, தன் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக நுண்ணறிவு காவல்துறையினரின் அறிக்கை அடிப்படையில் மத்திய அரசு வழங்கியுள்ளது, ஏன் எதற்காக வழங்கபட்டது? என மத்திய அரசிடம் கேட்கப்போவதில்லை. அதேவேளையில் கட்சியில் செய்யவேண்டிய பணியில் பாதிப்புகள் ஏற்படக்கூடாது.

தமிழ்நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கபட்ட பிரதிநிதி ஒருவர் உயிரிழந்திருப்பது வருத்தத்திற்குரியது. அதேவேளையில் அவரை இழந்து வாடும் குடும்பத்தினரின் துக்கம் மறைவதற்கு முன்பாக இடைத்தேர்தல் நடத்த திமுக அரசு அவசரப்படுகிறது. மனிதனை மனிதனாக மதிக்கும் பண்பு திமுகவிற்கு இல்லை.

மேலும், தனியார் துறையில் ஆண்டிற்கு 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் எனவும்; அரசுத்துறையில் 3.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் எனவும் திமுக தேர்தல் அறிக்கையில் வெளியிட்டுள்ள நிலையில், திமுக ஆட்சிக்கு வந்து 20 மாதங்கள் ஆகியுள்ளன. மொத்த ஆட்சியில் 3ல் ஒரு பங்கு முடிந்துள்ளது, ஆனால் இதுவரையிலும் வேலைவாய்ப்புகள் வழங்கப்படவில்லை.

தமிழ்நாட்டில் டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு நடைபெற்று 6 மாதங்களாகியும் அதன் முடிவுகளை வெளியிடாத அரசு எப்படி வேலைவாய்ப்புகளை வழங்க முடியும். திமுகவுக்கும் எப்போதும் எதிரி வேண்டும், திரைப்பட அரசியல் படி; திரைப்படத்தில் நடிகர்களுக்கு வில்லன்கள் இருப்பது போல் திமுக அரசு ஆளுநரை வில்லனாக சித்தரிக்கிறது. ஆளுநரை வைத்து அரசியல் செய்வதும் ஒவ்வொரு மாதமும் ஆளுநரைப் பற்றி புதுபுது பிரச்னையை கிளப்புவதும் தான் திமுகவின் வாடிக்கை.

திமுக ஆளுநரை சீண்டிவருகின்றனர். மேற்குவங்கம், கேரளாவைப் போல் ஆளுநர் செய்தியாளர்களை நேரடியாக சந்தித்தால் அரசின் மானம் நிலைகுலைந்துவிடும். தொடர்ந்து ஆளுநரை திமுக சீண்டிக் கொண்டிருந்தால் ஆளுநர் அமைதி காப்பாரா என்பதைக் கூற இயலாது. 2024 தேர்தலில் பாஜக கொள்கை சார்ந்த கூட்டணி அமைக்கும். திமுக-வைப் போல் சந்தர்ப்பவாத கூட்டணி அமைக்காது. பாஜகவிற்கும் அதிமுகவிற்கும் இடையே புதிய கல்வி கொள்கை, மும்மொழிக் கொள்கை ஆகியவைகளில் பிரச்னை இருக்கத்தான் செய்கிறது. எனினும் ஒரே கொள்கை அடிப்படையில் கூட்டணி அமைக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஆளுநருக்கு மிரட்டல்; திமுக பேச்சாளருக்கு எதிராக ஆளுநர் மாளிகை தரப்பில் புகார்

Last Updated : Jan 14, 2023, 12:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.