ETV Bharat / state

செம்மண் கடத்துபவரோடு தொடர்பு.. தலைமை காவலர் சஸ்பெண்ட் - குமரி எஸ்பி ஹரிகரன் அதிரடி - kanyakumari SP Hari Kiran Prasad

குமரி அருகே அஞ்சு கிராமம் காவல்நிலைய தலைமைக் காவலர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Sep 24, 2022, 6:30 PM IST

கன்னியாகுமரி: செம்மண் கடத்தும் கும்பலோடு தொடர்பில் இருந்ததாக அஞ்சு கிராமம் காவல்நிலைய தலைமைக் காவலரை பணியிடைநீக்கம் செய்து மாவட்ட எஸ்பி ஹரிகரன் பிரசாத் உத்தரவிட்டு உள்ளார்.

மாவட்டத்தில் கனிமவள கடத்தல் தீவிரமாக நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்நிலையில் அஞ்சு கிராமம் சுற்று வட்டார பகுதிகளில் செம்மண் கடத்தல் தீவிரமாக நடைபெற்று வருகிறது. செம்மண் கடத்தல் கும்பலோடு அஞ்சு கிராமம் காவல் நிலைய தலைமை காவலர் லிங்கேஷுக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாகக் குற்றச்சாட்டுகள் வந்தன.

இதனையடுத்து அவரை துறைரீதியாக, கண்காணிக்கப்பட்டு வந்ததைத் தொடர்ந்து அது உறுதியானது. இதனைத் தொடர்ந்து அவரைப் பணியியிடை நீக்கம் செய்து இன்று (செப்.24) மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரசாத் அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பண மோசடி வழக்கில் தலைமறைவு...சென்னை விமான நிலையத்தில் மும்பை தொழிலதிபர் கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.