தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர் சங்கம் சார்பில் குமரி மாவட்ட குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், “நாங்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக அங்கன்வாடியில் ஊழியர்கள், உதவியாளர்களாக பணியாற்றி வருகிறோம். எங்களுக்கு உரிய ஊதியம் இதுவரை வழங்கப்படவில்லை. மேலும், எங்களை அரசு ஊழியர் ஆக்கி எங்களுக்கு ஊதிய நிர்ணயம் செய்து வழங்க வேண்டும். எங்களுக்கு ஓய்வுதியம் வழங்க வேண்டும். அதேபோல் பணியை முடித்து செல்லும்போது ஊழியர்களுக்கு 10 லட்சம் ரூபாயும், உதவியாளர்களுக்கு 5 லட்சம் ரூபாயும் பணி கொடையாக வழங்க வேண்டும்.
அரசு எங்களின் இந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். இல்லையென்றால் வரும் 29ஆம் தேதி மாவட்ட அலுவலகத்தில் தர்ணா போராட்டமும், பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி சென்னையில் முற்றுகை போராட்டமும் நடத்த முடிவு செய்துள்ளோம்” எனக் கூறினர்.
இதையும் படிங்க...பேரறிவாளன் விடுதலை விவகாரம்: முடிவெடுக்க ஆளுநருக்கு ஒரு வாரம் அவகாசம்