ETV Bharat / state

வெயிலில் ஸ்ட்ரக்சரில் அநாதையாக விடப்பட்ட மூதாட்டி; குமரி அரசு மருத்துவமனையில் இக்கதி

author img

By

Published : Nov 4, 2022, 11:01 PM IST

கன்னியாகுமரி மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடும் வெயிலில் ஸ்ட்ரக்சரில் அநாதையாக விடப்பட்ட மூதாட்டி வைரலாகும் வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடும் வெயிலில் ஸ்ட்ரக்சரில் அனாதையாக விடப்பட்ட மூதாட்டி-வைரல் வீடியோ

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அடுத்த ஆசாரிப்பள்ளம் பகுதியில் அமைந்துள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளை அங்கு பணியில் இருக்கும் ஊழியர்கள் கவனமற்ற முறையில் பராமரித்து வருவதாக குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்து வருகிறது.

நோயாளிகள் அல்லது அவர்களோடு இருப்பவர்கள் ஊழியர்களிடம் ஏதேனும் சந்தேகம் கேட்டால் கோபத்தோடு பதில் சொல்வதும், நோயாளி என்றும் பாராமல் வெறுப்பு பேச்சுக்களை கொட்டுவதும் என பல குற்றச்சாட்டுகள் உள்ளன.

இந்நிலையில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மருத்துவமனை ஊழியர்களின் நோயாளிகள் மீதான அக்கறையற்ற தன்மையை வெளிக்காட்டும் சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் வீடியோ காட்சியாக பரவி மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

நோயாளியான மூதாட்டி ஒருவரை ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு ஸ்ட்ரசக்சரில் இழுத்துச் சென்ற ஊழியர் ஒருவர் மூதாட்டியை கடும் வெயிலில் ரோட்டில் போட்டுவிட்டு வேறு வேலைக்குச்சென்று அந்த வேலையை முடித்துவிட்டு பின்னர் ஸ்ட்ரக்சரை இழுத்துச்சென்ற சம்பவம் வீடியோவாக பரவுகிறது. இதனிடையே உடல்நலம் குன்றிய நோயாளியான மூதாட்டி வெயிலில் அவதிப்பட்டார்.

மேலும், மருத்துவமனை வளாகத்தில் ஸ்ட்ரக்சர் கொண்டு செல்லப்படும் சாலைகள் மிகவும் பழுதடைந்து காணப்படுவதால் ஸ்ட்ரக்சரில் படுத்திருக்கும் நோயாளிகள் ஊழியர்களால் இழுத்துச்செல்லும் போது அனுபவிக்கும் சிரமங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல என்கிறார்கள், நோயாளிகளோடு இருப்பவர்கள்.

உடல்நிலை மோசமாகி பெரும் பாதிப்புக்கு உள்ளான நோயாளிகள் மட்டுமே ஸ்ட்ரக்சரில் கொண்டு செல்லப்படும் நிலையில், அவர்களை கவனத்தோடு அழைத்துச்செல்வதில் கவனம் செலுத்தாமல் ஊழியர்கள் செயல்படுவது வேதனை அளிப்பதாக உள்ளது என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், ஊழியர்களின் அஜாக்கிரதையான செயல்பாட்டை பொறுப்பான அதிகாரிகளும் கண்டு கொள்ளாத நிலை தொடர்வதாகவும் இப்படிப்பட்ட ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: பால் விலை உயர்வுக்கு பால் முகவர்கள் சங்கம் கடும்கண்டனம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.