ETV Bharat / state

பாலியல் புகார் பாதிரியார் மீது மேலும் ஒரு இளம்பெண் புகார்! - benedict anto case update

பாலியல் புகார் வழக்கில் கைது செய்யப்பட்ட பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ மீது மேலும் ஒரு இளம் பெண் புகார் அளித்து உள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Apr 7, 2023, 3:40 PM IST

கன்னியாகுமரி: தக்கலை அருகே பிலாங்காலை தேவாலயத்தில் பாதிரியாக இருந்தவர் பெனடிக் ஆன்டோ. தேவாலயங்களுக்கு வரும் இளம் பெண்களிடம் பாலியல் ரீதியாக சாட்டிங் செய்ததாக வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவியது. இதையடுத்து பேச்சிப்பாறையை சேர்ந்த நர்சிங் கல்லூரி மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் ஐந்து பிரிவுகளில் நாகர்கோவில் சைபர் கிரைம் போலீசார் பாதிரியர் பெனடிக் ஆன்டோ மீது வழக்குப் பதிவு செய்தனர்.

தொடர்ந்து விசாரணை நடத்தி வந்த போலீசார் கடந்த 19ஆம் தேதி பாதிரியார் பெனடிக் ஆன்டோவை கைது செய்தனர். விசாரணைக்குப் பின்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பாதுகாப்பு கருதி அவரை நெல்லையில் உள்ள பாளையங்கோட்டை சிறைக்கு போலீசார் மாற்றினர்.

இதனிடையே ஒரு நாள் காவலில் பெனடிக் ஆன்டோ எடுக்கப்பட்டு விசாரணைக்காக நாகர்கோவில் அழைத்துவரப்பட்டார். அவரிடம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர். அவருடைய லேப்டாப் மற்றும் செல்போனில் இருந்த பெண்களின் புகைப்படங்கள், சாட்டிங் செய்த பெண்களின் புகைப்படங்கள் ஆகிய ஆதாரங்களை மையமாக வைத்து விசாரணை நடத்தப்பட்டது.

அனைத்து கேள்விகளுக்கும் முறையாகவே பாதிரியார் பெனடிக் ஆன்டோ பதிலளித்தார் என்றும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்காக இந்த விசாரணை நடைபெற்றதாகவும் சைபர் கிரைம் போலீசார் தெரிவித்தனர். யார் யார் அந்த பெண்மணிகள்? யார் யாருடன் எந்த மாதிரி தொடர்புகள் என்ற விசாரணையும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பாதிரியர் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குலசேகரம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பாதிரியார் செல்போன் மூலம் பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆன்லைன் மூலம் நாகர்கோவில் சைபர் கிரைம் போலீசாருக்கு புகார் அளித்துள்ளார். அந்த இளம்பெண்ணிடம் ரகசிய விசாரணை நடத்திட சைபர் கிரைம் போலீசார் ஆலோசனை செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க : ஆர்.என்.ரவி ஆளுநர் வேலையை தவிர மற்ற எல்லா வேலையும் செய்கிறார்: இயக்குநர் பா.ரஞ்சித்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.