கிறிஸ்தவர்கள் மரணம் அடைகின்றபொழுது பொதுவாக கல்லறைகளில் அடக்கம் செய்யப்படுகின்றனர். கல்லறைகளுக்குச் சென்று அவர்களை நினைவுகூருவதற்கு வசதியாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் இரண்டாம் தேதி சகல ஆத்மாக்களின் திருநாள் எனக் கல்லறை திருநாள் என்ற பெயரில் கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்த நாளில் இறந்துபோன தமது முன்னோர்களின் உடல்கள் அடக்கம்செய்யப்பட்ட இடத்திலுள்ள கல்லறைகளைச் சுத்தம் செய்தும், மலர்கள் தூவியும், மலர் மாலைகள் அணிவித்து மெழுகுவர்த்தி, ஊதுபத்தி ஏற்றி வைத்து ஜெப புத்தகங்களை படித்தும், பாடல்கள் பாடியும் அமைதியாக பிரார்த்தனை செய்து அஞ்சலியும் செலுத்துவது வழக்கம்.
இன்று கல்லறை திருநாளையொட்டி நாகர்கோவில் ராமன் புதூரில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் ஏராளமான கிறிஸ்தவர்கள் அதிகாலையிலேயே கல்லறை தோட்டத்தில் கூடி தங்களின் முன்னோர்களின் கல்லறைகளில் மலர்கள் வைத்தும், மாலை அணிவித்து அலங்கரித்து மெழுகுவர்த்தி மற்றும் ஊது பத்தி ஏற்றியும் அஞ்சலி செலுத்தினர்.
கிறிஸ்தவ பாதிரியார்கள் அந்த கல்லறைகளில் இறந்தவர்களின் ஆன்மாக்களுக்காக புனிதநீர் தெளித்து சிறப்பு வழிபாடுகளை நடத்தினர். இந்தநிகழ்ச்சியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: கல்லறை சேதம்; ஒன்று திரண்டு போராடிய கிறிஸ்தவர்கள்!,