ETV Bharat / state

அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டம்..! - கன்னியாகுமரி

நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கொட்டும் மழையில் வீடு இல்லாத ஏழை தொழிலாளர்களுக்கு வீடு கட்டி கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டம்..!

author img

By

Published : Aug 1, 2022, 9:13 PM IST

கன்னியாகுமரி: அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய மாநில அரசுகளை கண்டித்து கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

குறிப்பாக, கடந்த சட்டப்பேரவை தேர்தலின் போது திமுக மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியின் படி 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை 150 நாட்களாகவும் 200 ரூபாய் கூலியை தினசரி 300 ரூபாய் வழங்குவோம் என அறிவித்த அறிவிப்பை நடைமுறைப்படுத்த வேண்டும்.

55 வயது முதிர்ந்தவர் தொழிலாளர்களுக்கு ஐயாயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்க வேண்டும். 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் உள்ள முறைகேடுகளை களைய வேண்டும். வீடு இல்லாத ஏழை தொழிலாளர்களுக்கு வீடு கட்டி கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டம்..!

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட புதுக்கோட்டை மாவட்ட கந்தர்வர் கோட்டை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ சின்னத்துரை, தாலிக்கு தங்கம் திட்டத்தை நிறுத்தியது கண்டனத்திற்குரியது, அந்த திட்டத்தை தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

இதையும் படிங்க:சஞ்சய் ராவத்துக்கு ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை அமலாக்கத்துறை காவல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.