கன்னியாகுமரி மாவட்டத்தில், பிரசித்திப் பெற்ற கோயில்களில் நாகர்கோவில் வடிவீஸ்வரம் அழகம்மன் சமேத ஸ்ரீசுந்தரேஸ்வரர் கோயிலும் ஒன்றாகும். இந்தக் கோயிலில் மாசிப் பெருந்திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில், இந்த ஆண்டுக்கான மாசித் திருவிழா கடந்த மாதம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து திருக்கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. இதில் இந்துசமய அறநிலையத்துறை அலுவலர்களும் ஏராளமான பக்தர்களும் கலந்துகொண்டனர்.
கடந்த 8 நாள்களாக விழாவின் ஒவ்வொரு நாளும் சுவாமியும், அம்பாளும் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும், மாலை, இரவு நேரங்களில் சமயச் சொற்பொழிவு, பக்தி இன்னிசை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
இந்நிலையில் நேற்று காலை 9.15 மணிக்குத் தேரோட்டம் நடைபெற்றது. இதில் கன்னியாகுமரி மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் தொட்டு தேரை இழுத்தனர். இரவில் தேரடி திடலில் சப்தவர்ண நிகழ்ச்சி நடைபெறுகிறது. 10ஆம் நாளான இன்று இரவு 8.30 மணிக்கு சுவாமியும், அம்பாளும் ரிஷப வாகனத்தில் ஆராட்டுத்துறையில் இருந்து பவனி வருதல் நிகழ்ச்சி நடைபெற்று திருவிழா நிறைவடைந்தது.
இதையும் படிங்க... ’காஞ்சி காமாட்சி அம்மன் கோயில்தான் காமகோடி சக்தி பீடம்’