ETV Bharat / state

பேனர் தடை அமலில் இருக்கும்போது அமைச்சருக்கு பிளக்ஸ் வைத்த அதிமுகவினர்

author img

By

Published : Oct 23, 2019, 3:07 PM IST

கன்னியாகுமரி: பிளக்ஸ் போர்டு வைப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், நாகர்கோவிலில் அமைச்சர் பங்கேற்கும் விழாவையொட்டி அதிமுகவினர் சாலையோரம் பிளக்ஸ் போர்டு வைத்திருப்பது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சருக்கு வைக்கப்பட்டுள்ள பேனர்

சென்னை பள்ளிக்கரணையில் அதிமுகவினர் வைத்திருந்த பிளக்ஸ் போர்டு விழுந்து கடந்த மாதம் சென்னை ஐடி ஊழியர் சுபஸ்ரீ பலியானார். இதைத் தொடர்ந்து, உயர்நீதிமன்றம் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன், அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பேனர்களை உடனடியாக அகற்றவும் உத்தரவிட்டது.

அரசியல் கட்சி தலைவர்களும், தங்களுக்கு பேனர் வைக்கக் கூடாது என தொண்டர்களுக்கு அறிவுறுத்தினர். இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு முழுவதும் உள்ளாட்சி அலுவலர்களால் பிளக்ஸ் பேனர்கள் அகற்றப்பட்டன.

அமைச்சருக்கு வைக்கப்பட்டுள்ள பேனர்

இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் துறை அமைச்சர் சரோஜா பங்கேற்கும் தாலிக்கு தங்கம் வழங்குதல் மற்றும் திருமண உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, சில இடங்களில் சாலையோரமாக அதிமுகவினர் பிளக்ஸ் போர்டுகளை வைத்துள்ளனர். ஆளுங்கட்சியான அதிமுக சார்பில் வைக்கப்பட்டுள்ள போர்டுகள் என்பதால் அவற்றை அகற்றுவதற்கு அலுவலர்கள் தரப்பில் அக்கறை காட்டவில்லை. இதன் மூலம் ஆளுங்கட்சியினர் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதையும் படிங்க: ‘பேனருக்கு தடை விதிக்கக் கூடாது’ - தனியரசு எம்எல்ஏ

Intro:கன்னியாகுமரி: குமரி மாவட்டம் நாகர்கோவிலில் அமைச்சர் பங்கேற்கும் விழாவையொட்டி அதிமுகவினர் சாலையோரம் பிளக்ஸ் போர்டு அமைத்துள்ளனர். பிளக்ஸ் போர்டு தடை செய்யப்பட்டுள்ள நிலையில் ஆளுங்கட்சியினர் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Body:சென்னை பள்ளிக்கரணையில் அதிமுகவினர் வைத்திருந்த பிளக்ஸ் போர்டு விழுந்து கடந்த மாதம் பொறியாளர் சுபஸ்ரீ பலியானார். இதை தொடர்ந்து, உயர்நீதிமன்றம் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும் முறைகேடாக வைக்கப்பட்டுள்ள பேனர்களை உடனடியாக அகற்றவும் உத்தரவிட்டது.
இதனையடுத்து அரசியல் கட்சி தலைவர்களும், தங்களுக்கு பேனர் வைக்க கூடாது என தொண்டர்களுக்கு அறிவுறுத்தினர். இதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அதிகாரிகளால் பிளக்ஸ் பேனர்கள் அகற்றப்பட்டன.
இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் துறை அமைச்சர் சரோஜா பங்கேற்கும் தாலிக்கு தங்கம் வழங்குதல் மற்றும் திருமண உதவித் தொகை வழங்கும் விழாவை நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, சில இடங்களில் சாலையோரமாக பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன. ஆளுங்கட்சியான அதிமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள போர்டுகள் என்பதால் அவற்றை அகற்றுவதற்கு அதிகாரிகள் தரப்பில் அக்கறை காட்டவில்லை. இதன் மூலம் ஆளுங்கட்சியினர் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.