ETV Bharat / state

‘ஆர்எஸ்எஸ் கொள்கையை கடைப்பிடிப்பதில் பாஜகவை அதிமுக மிஞ்சிவிட்டது’ - நல்லக்கண்ணு

கன்னியாகுமாரி: கோட்சே குறித்து கருத்து தெரிவித்ததற்காக மநீம தலைவர் கமல் நாக்கை அறுப்போம் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியிருப்பது மூலம் இந்துத்துவா கொள்கையை கடைபிடிப்பதில் பாஜக, ஆர்எஸ்எஸை அதிமுக மிஞ்சிவிட்டது என கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லக்கண்ணு தெரிவித்துள்ளார்.

ஆர். நல்லகண்ணு
author img

By

Published : May 14, 2019, 8:46 PM IST

கன்னியாகுமரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவதற்காக வருகை தந்த கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, தமிழ்நாடு முழுவதும் மக்கள் குடிநீர் இல்லாமல் திண்டாடி வருகின்றனர். மீத்தேன் எரிவாயு, ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி கொடுத்திருப்பதன் மூலம் மாநிலத்தை பாலைவனமாக மாற்ற முயற்சி செய்து வருகிறார்கள்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி கொடுத்து இருப்பதன் மூலமாக மத்திய அரசு திட்டமிட்டு தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்கிறது என்றும், ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து போராடும் மக்கள் எந்த அடக்குமுறைக்கும் பயந்து நிற்க மாட்டார்கள் தொடர்ந்து போராடுவார்கள் என்றும் அனைத்துக் கட்சிகளும் இணைந்து மத்திய மாநில அரசுகளை எதிர்த்து போராடும் அவசியம் வந்துவிட்டது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் நல்லக்கண்ணு பேட்டி

மேலும், கோட்சே குறித்து கருத்து தெரிவித்ததற்காக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் நாக்கை அறுப்போம் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியிருப்பது மூலம் இந்துத்துவா கொள்கையை கடைப்பிடிப்பதில் பாஜக, ஆர்எஸ்எஸை அதிமுக மிஞ்சிவிட்டது” என அவர் தெரிவித்தார்.

Intro:கோட்சே குறித்து கருத்து தெரிவித்ததற்காக நாக்கை அறுப்போம் என தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியிருப்பது மூலமாக இந்துத்துவாவில் பாஜக கட்சி மற்றும் ஆர்எஸ்எஸ் செய்யும் அதிமுக மிஞ்சி விட்டது என்று கன்னியாகுமரியில் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லக்கண்ணு பேட்டி.

Body:கோட்சே குறித்து கருத்து தெரிவித்ததற்காக நாக்கை அறுப்போம் என தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியிருப்பது மூலமாக இந்துத்துவாவில் பாஜக கட்சி மற்றும் ஆர்எஸ்எஸ் செய்யும் அதிமுக மிஞ்சி விட்டது என்று கன்னியாகுமரியில் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லக்கண்ணு பேட்டி.

கன்னியாகுமரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு பத்திரிகையாளர் சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது:- தமிழக மக்கள் குடிநீர் இல்லாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். தமிழகம் பாலைவனமாக மாறிக்கொண்டிருக்கிறது. மீத்தேன் எரிவாயு ,ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு அனுமதி கொடுத்திருப்பதால் காவிரி டெல்டா பகுதிகளில் அலைந்து மீண்டும் நெருக்கடி வரும் என்றும் அதேபோல் 8 வழி சாலை திட்டத்தை எதிர்த்து பொது மக்கள் நீதிமன்றம் சென்று போராடி கிடைத்த நீதியை மதிக்காமல் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய இருப்பது மூலம் தமிழக அரசு மக்கள் கோரிக்கை மதிக்காமல் இருக்கிறது தெரிகிறது என்றும் மேலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி கொடுத்து இருப்பதன் மூலமாக மத்திய அரசு திட்டமிட்டு தமிழக மக்களை வஞ்சிக்கிறது என்றும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து போராடும் மக்கள் எந்த அடக்குமுறைக்கும் பயந்து நிற்க மாட்டார்கள் தொடர்ந்து போராடுவார்கள் என்றும் அனைத்துக் கட்சிகளும் இணைந்து மத்திய மாநில அரசுகளை எதிர்த்து போராடும் அவசியம் வந்து விட்டது என்றும் தங்கள் கட்சி நியாயமான போராட்டத்திற்கு முழுமையான ஆதரவு தெரிவிப்பதோடு போராட்டத்தில் கலந்து கொள்வோம் என்றும் தெரிவித்தார் .மேலும் அவர் கூறுகையில் கோட்சே குறித்த கருத்து தெரிவித்ததற்காக நாக்கை அறுப்போம் என தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியிருப்பது மூலமாக இந்தியாவில் பாஜக கட்சி மற்றும் ஆர்எஸ்எஸ் செய்யும் அதிமுக மிஞ்சிவிட்டது என தெரிவித்தார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.