ETV Bharat / state

குமரியில் 3,500 பெண்களுக்கு தாலிக்குத் தங்கம்!

கன்னியாகுமரி: நாகர்கோவிலில் சமூகநலத் துறை சார்பில் தாலிக்குத் தங்கம், திருமண உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

minister saroja
author img

By

Published : Oct 23, 2019, 9:48 PM IST

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் ஏழைப் பெண்கள் திருமணம் தடை என்பதே இல்லாத நிலை உருவாக்கும் விதமாக தொடங்கப்பட்ட மகத்தான திட்டம்தான் தாலிக்குத் தங்கம், திருமண உதவித் தொகை வழங்கும் திட்டம்.

இந்தத் திட்டத்தினால் ஏழை, எளிய பெண்கள் நல்ல பயன் அடைந்துள்ளனர். ஜெயலலிதா மறைவிற்குப் பிறகும் தமிழ்நாடு முழுவதும் இந்தத் திட்டம் தொய்வின்றி சிறப்புடன் செயல்படுத்தப்பட்டுவருகிறது.

தாலிக்குத் தங்கம் வழங்கிய அமைச்சர் சரோஜா

அதன் அடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் சமூகநலத் துறை சார்பில் தாலிக்குத் தங்கம், திருமண உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில், தமிழ்நாடு சமூக நலன் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை அமைச்சர் சரோஜா கலந்துகொண்டார்.

அப்போது, இரண்டாயிரத்து 334 பட்டதாரிகள், ஆயிரத்து 166 பட்டதாரி அல்லாதவர்கள் என மூவாயிரத்து 500 பயனாளிகளுக்கு 28 ஆயிரம் கிராம் தாலிக்குத் தங்கம் வழங்கினார். மேலும், 14 கோடியே 58 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதி உதவியும், இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் ஐந்து பயனாளிகளுக்குத் தையல் இயந்திரமும் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய் சுந்தரம், மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே, அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Intro:கன்னியாகுமரி: குமரி மாவட்டம் நாகர்கோவிலில் சமூகநலத்துறை சார்பில் தாலிக்கு தங்கம் மற்றும் திருமண உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தமிழக சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டதுறை அமைச்சர் சரோஜா கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
Body:தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் ஏழை பெண்கள் திருமணம் தடை என்பதே இல்லாத நிலை உருவாக்கும் விதமாக தொடங்கப்பட்ட திட்டமான தாலிக்கு தங்கம் மற்றும் திருமண உதவி தொகை வழங்கும் திட்டம் இன்றும் தமிழகம் முழுவதும் சிறப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன் படி, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் சமூகநலத்துறை சார்பில் தாலிக்கு தங்கம் மற்றும் திருமண உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சியில் இன்று நடைபெற்றது. இதில், தமிழக சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டதுறை அமைச்சர் சரோஜா கலந்து கொண்டு 2334 பட்டதாரிகள் மற்றும் 1166 பட்டதாரி அல்லாதவர்கள் என 3500 பயனாளிகளுக்கு 28,000 கிராம் தாலிக்கு தங்கம் வழங்கினார்.
மேலும், ரூ.14 கோடியே 58 லட்சத்து 50 ஆயிரம் நிதி உதவியும் மற்றும் இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு தையல் இயந்திரமும் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு வடநேரே மற்றும் அரசு அதிகாரிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.