ETV Bharat / state

கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகளுக்கு விழிப்புணர்வு!

author img

By

Published : Mar 20, 2020, 11:16 PM IST

கன்னியாகுமரி: கரோனா வைரஸ் தாக்குதல் குறித்து சுற்றுலாப் பயணிகளுக்கு பல்வேறு மொழிகளில் பேரூராட்சி நிர்வாகத்தினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

சுற்றுலாப் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய பேரூராட்சி நிர்வாகம்

உலகை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தற்போது இந்தியாவையும் தொற்றிக் கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் பெரிய அளவிலான பாதிப்புகள் இல்லாதப்பட்சத்திலும் தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதில் ஒரு பகுதியாக சுற்றுலாப் பயணிகள் கூடும் இடங்களில் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்நிலையில் சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் அரசின் உத்தரவினை ஏற்று நூற்றுகணக்கான தங்கும் விடுதிகள் மூடப்பட்டுள்ளன.

விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து வரும் 31ஆம் தேதி வரை நிறுத்தப்பட்டுள்ளது. பிரசித்திப்பெற்ற குமரி பகவதி அம்மன் கோயில், சுசீந்திரம் தாணுமாலையன் சுவாமி கோயில் ஆகியவை மூடப்பட்டுள்ளன.

இதன் தொடர்ச்சியாக தற்போது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து, பல்வேறு மொழி பேசக்கூடிய சுற்றுலாப் பயணிகள் மிகவும் குறைந்த அளவு கன்னியாகுமரிக்கு வருகின்றனர்.

சுற்றுலாப் பயணிகளுக்கு கரோனா விழிப்புணர்வு

அவர்களுக்கு புரியும் வகையில் கன்னியாகுமரி பேரூராட்சி நிர்வாகம் மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மராத்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் கரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இதையும் படிங்க: கரோனா தொற்று: தமிழ்நாட்டில் எண்ணிக்கை 3ஆக உயர்வு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.