ETV Bharat / state

'சாதிப்பெயரால் வன்முறைகள் நிகழ்வதைத் தடுக்க உளவுப்படை தேவை' - திருமா

சாதி, மதத்தின் பெயரால் வன்முறைகள் நிகழ்வதைத் தடுப்பதற்கு முன்னெச்சரிக்கையாக கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உளவுப்படை தேவைப்படுகிறது, இதுகுறித்து தமிழ்நாடு அரச சிந்திக்க வேண்டும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jan 20, 2023, 4:13 PM IST

செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினருமான தொல். திருமாவளவன் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வந்தடைந்தார்.

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 'புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் பிரச்னை தொடர்பாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் பேசியபோது, இந்த அநாகரிகமான செயல் கண்டிக்கத்தக்கது என்றும்;அத்துடன் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடியவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்; இரும்புக்கரம் கொண்டு நசுக்குவோம் என்றும் உறுதியளித்திருக்கிறார்.

முதலாவதாக, சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு ஆணையிடப்பட்ட நிலையில் அந்த குழுவின் நடவடிக்கைகள் விமர்சனத்துக்கு உள்ளாகின. உடனடியாக முதலமைச்சர் தலையிட்டு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி இருக்கிறார். சிபிசிஐடி விசாரணையில் உண்மைக் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

தீவிரவாதத்தைக் கண்காணிப்பதற்கு எவ்வாறு கியூ பிராஞ்ச் இருக்கிறதோ, அது போல சாதி, மதத்தின் பெயரால் வன்முறைகள் நிகழ்வதைத் தடுப்பதற்கு முன்னெச்சரிக்கையாக கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒரு உளவுப்படை தேவைப்படுகிறது. தமிழ்நாடு அரசு இது குறித்து தீவிரமாக சிந்திக்க வேண்டும்.

இரட்டைக் குவளை முறை தமிழ்நாடு முழுவதும் பரவலாக உள்ளன. அவற்றைக் கண்டறிவதற்கு சிறப்பு விசாரணை ஆணையத்தை தமிழ்நாடு அரசு அமைக்க வேண்டும். அங்கொன்றும் இங்கொன்றுமாக நமக்கு வெளிச்சத்திற்கு வந்தாலும் கூட பல இடங்களில் இது இன்னும் நடைமுறையில் இருக்கிறது. அதை முற்றாக ஒழிப்பதற்கு முதலமைச்சர், காவல் துறைக்கு உரிய ஆணை பிறப்பிக்க வேண்டும். அதற்கு முன்னதாக அவை பற்றி ஒரு ஆய்வை நடத்துவதற்கு அறிக்கை அளிக்க ஏதுவாக விசாரணை ஆணையம் ஒன்றை அமைக்க வேண்டும்” என்றார்.

தொடர்ந்து, ராமர் பாலம் தேசிய சின்னமாக அறிவிக்க மத்திய அரசு பரிசீலிப்பது குறித்த கேள்விக்கு?, “தமிழ்நாடு அமைச்சர் சட்டப்பேரவையில் அது ராமர் பாலம் இல்லை என்று பேசினார். மீண்டும் அவர்கள் ராமர் பாலம் என்று சொல்வது அதிர்ச்சியாக இருக்கிறது. அங்கு சேது கால்வாய் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. அந்த திட்டம் வெற்றி பெற வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வாழ்த்துகிறது. அந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கூடாது என்று கருத்துபவர்கள் ராமர் பாலம் பிரச்னையை கையில் எடுக்கிறார்கள்” என்றார்.

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி கேள்விக்கு; “காங்கிரஸ் போட்டியிட்ட தொகுதி, காங்கிரஸ் வென்ற தொகுதி, மீண்டும் காங்கிரஸ் போட்டியிடுவதற்கு திராவிட முன்னேற்றக் கழகம் இடமளித்திருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணி ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி பெறும். அதற்கு திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் தீவிரமாக பணியாற்றும். அதிமுக இன்றைக்கு சின்னத்தை இழந்திருக்கிறது. ஒரே அதிமுக இல்லை, யார் நின்றாலும், அந்த தொகுதியில் திமுக கூட்டணி வெற்றி பெறும்” என்றார்.

தாட்கோ கடன் தொடர்பான கேள்விக்கு? - “தமிழ்நாடு முழுவதும் அந்த பிரச்னை இருக்கிறது. தாட்கோ மானியத் தொகை வழங்குவதற்கு முன் வந்தாலும் வங்கிகள் அதற்குத் தயாராக இல்லை. வங்கியும் ஒத்துழைத்தால் தான் தாட்கோ கடன் உதவியை ஆதிதிராவிட பொது மக்கள் பயன்பெற முடியும். தேசிய வங்கிகள் பெரும்பாலும் ஒத்துழைக்கவில்லை என்பது வேதனையளிக்கிறது” என்றார்.

ஈஷா யோகா மையம் பெண் இறப்பு குறித்த கேள்வி? - “ஈஷா யோகா பயிற்சிக்கு சென்று திரும்பும் அந்த பெண்மணியின் இழப்புக்கு காரணம் யார்? ஏன் நடந்தது? என்ன பின்னணி? என்பதை மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அது குறித்து விசாரணைக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும்” என்றார்.

சேது சமுத்திர திட்டம்; - “சேதுக்கால்வாய் திட்டம் சுற்றுச்சூழல் பார்வையில் கூடாது என்பது சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது. மீனவர்களின் பாதிப்பு என்ன என்பதையும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். ஆனாலும்கூட இந்துமாக்கடலில் நிலவுகிற சர்வதேச அரசியலைக் கருத்தில் கொண்டு சேதுக் கால்வாய்த் திட்டத்தில் தேவையை தமிழ்நாடு அரசு உணர்கிறது.

மக்கள் குறைகளையும் கவனிக்க வேண்டும். அவர்களின் கோரிக்கைகளை கேட்டு அவர்களின் விருப்பத்தை அறிந்து அதனடிப்படையில் இதுபோன்ற திட்டங்களை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். மேலும், மீனவர்களின் கோரிக்கையை அரசு பரிசீலிக்க வேண்டும்” என்றார்.

ஸ்டெர்லைட் ஆலை அறிக்கை சம்பந்தமாக? - “அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம் அறிக்கை அளித்து சில மாதங்கள் ஆகிவிட்டன. அந்த அறிக்கை மீதான நடவடிக்கையை அரசு மேற்கொண்டு வருவதாக நான் நம்புகிறேன். அதனடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டு இருக்கிறது. மேற்கொண்ட விவகாரத்தில் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: ‘நீதிபதிகள் தேர்வு குறித்து வதந்திகள் பரப்ப வேண்டாம்’ - மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.