ETV Bharat / state

கன்னியாகுமரி காசியின் மீது மோசடி புகார் அளித்த இளைஞர் கடத்தல்! - கன்னியாகுமரி காசியின் மீது மோசடி புகார் கொடுத்த இளைஞர்

கன்னியாகுமரி: நாகர்கோவிலில் பல பெண்களை ஏமாற்றி, மிரட்டி படம் பறித்த வழக்கில் கைது செய்யபட்ட காசியின் மீது கந்துவட்டி புகார், மோசாடி புகார் அளித்த இளைஞரை ஏழு பேர் கொண்ட கும்பல் கடத்தி தாக்கும் சிசிடிவி காட்சி குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிசிடிவியில் பதிவான காட்சி
சிசிடிவியில் பதிவான காட்சி
author img

By

Published : Dec 18, 2020, 7:07 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலிலைச் சேர்ந்தவர் இளைஞர் காசி. இவர், சமூக வலைதளம் மூலம் பல பெண்களுடன் பழகி அவர்களுடன் தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்ட வழக்கில் கைது செயப்பட்டு சிறையிலுள்ளார்.

முன்னதாக, நாகர்கோவில் அலெக்சந்திரா பிறஸ்ரோடு சாலையில் கடை வைத்து நடத்தி வரும் டேவிட் டினோ (28) என்பவரிடமுள்ள விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை, முறையாக வட்டிகட்டவில்லை எனக் கூறி அவரிடமிருந்து காசி பறித்துள்ளார். மேலும், சட்டவிரோதமாக பெயர்மாற்றமும் செய்துள்ளார். இது குறித்து காசி மீது காவல் துறையினர் வழக்கபதிவு செய்தனர். இதில் ஆர்.டி.ஓ புரோக்கர் உள்பட பலரும் சிக்கினர். இது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சூழலில் சொகுசு கார் ஒன்றை டினோ வாங்கியுள்ளார். இதற்காக நிதிநிறுவனம் ஓன்றில் பணம் கடனாக பெற்றதாக கூறப்படுகிறது. இதற்கான பணத்தை கட்டுவதில் பிரச்னை ஏற்பட்டதாக தெரிகிறது. பணத்தை கொடுத்த நிறுவனம் சார்பில் விக்ரமன் என்பவர் வாங்கிய பணத்தை விட கூடுதல் பணம் கேட்டதாகவும் கூறப்படுகிறது.

டினோ பனத்தை கொடுக்க மறுக்க, விக்ரமன் தலைமையில் ஏழுபேர் கொண்ட கும்பல் அவரை கடத்திச் சென்று தாக்கி, காரின் ஆர்சி புக்கை டினோ பெயரிலிருந்து விக்ரமன் பெயருக்கு எழுதி வாங்கிவிட்டு விடுவித்துள்ளனர். இது குறித்து டினோ வடசேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

சிசிடிவியில் பதிவான காட்சி

புகாரின் அடிப்படையில் விக்ரமன், பாலாஜி, அகஸ்தியன் உள்ளிட்ட ஏழு பேர் மீது காவல் துறையினர் கடத்தல் வழக்கு பதிவுசெய்து அவர்களைத் தேடி வருகின்றனர். காசியின் மீது புகார் அளித்த இளைஞரை கடத்திய சம்பவம் நாகர்கோவிலில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. டினோவை கடத்தி தாக்குவது அங்கிருந்து கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த காட்சிகளின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை தீவிர படுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: புதுப்பேட்டையில் இளைஞர் கொலை: மூவர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.