கன்னியாகுமரி: நவராத்திரி விழாவின் 9 ஆவது நாள் கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவிக்கு உகந்த நாளாகவும், தொழில் முன்னேற்றத்திற்கான நாளாகவும் கொண்டாடப்படுகிறது. இந்த நவராத்திரி விழாவை வெகு விமரிசையாக கொண்டாடும் மாவட்டங்களில் கன்னியாகுமரி மாவட்டமும் ஒன்று.
அதன் படி கன்னியாகுமரியில் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. மாவட்டம் முழுவதும் உள்ள ஆட்டோ, டாக்சி மற்றும் வேன் ஸ்டாண்ட்கள், தொழில் நிறுவனங்கள் உட்பட அனைத்து இடங்களிலும் ஆயுத பூஜை விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் அமலில் இருப்பதால் கலை நிகழ்ச்சிகள் இல்லாமல் குமரி மாவட்டத்தில் அமைதியான முறையில் ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது.
இதையும் படிங்க :மாநகராட்சியின் வேண்டுகோளை காற்றில் பறக்கவிட்ட பொதுமக்கள்!