ETV Bharat / state

'மீனவர்களுக்காக தனி அமைச்சகம் அமைக்கப்படும்' - பிரதமர் மோடி குமரியில் பேச்சு - கன்னியாகுமரி மாவட்டச் செய்திகள்

மீனவர்களுக்கு வளர்ச்சிப் பணிக்காக 20 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், மீனவர்களுக்கு தனி அமைச்சகம் ஏற்படுத்தப்பட்டு மீனவர்களின் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் குமரியில் நடந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.

a-separate-ministry-will-be-set-up-for-fishermen-says-prime-minister-modi
'மீனவர்களுக்காக தனி அமைச்சகம் அமைக்கப்படும்'- பிரதமர் மோடி குமரியில் பேச்சு
author img

By

Published : Apr 2, 2021, 10:42 PM IST

கன்னியாகுமரி: குமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரத்தில் உள்ள விவேகானந்தா கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று(ஏப்ரல் 02) கலந்து கொண்டு பாஜக - அதிமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார்.

இதற்காக அவர் கேரள மாநிலம், பத்தனம்திட்டாவில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரிக்கு மாலை 4.25 மணிக்கு வந்தடைந்தார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் விழா நடைபெறும் மேடைக்கு வந்தார்.

அவருக்கு விழா மேடையில் வைத்து நினைவுப்பரிசு வழங்கி, வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: 'மக்களுக்கு நம்பிக்கையூட்டும் அரசாக நாங்கள் உள்ளோம். ராமேஸ்வரம் - தனுஷ்கோடி ராயில்பாதை 50 ஆண்டுகளாக அப்படியே கிடந்தது. 50 ஆண்டுகளுக்குப்பிறகு, நமது அரசு தான் அதனை சீர் செய்தது.

'மீனவர்களுக்காக தனி அமைச்சகம் அமைக்கப்படும்'- பிரதமர் மோடி குமரியில் பேச்சு

அன்போடு பண்போடு

பாம்பன் பாலமும் நாங்கள் தான் சீர் செய்தோம். தமிழ்நாட்டில் ஒரு கட்சி அவர்களின் வாரிசுகள் குறித்து மட்டுமே கவலைப்படுகிறது. உங்களின் குழந்தைகள் குறித்து, அவர்கள் கவலைப்படவில்லை. டெல்லியின் மத்தியப்பகுதியில் ஒரு வம்சத்தின் நினைவுச்சின்னத்தைக் கட்ட பலகோடி மதிப்புள்ள இடம் ஒதுக்கப்பட்டது.

ஆனால், நாங்கள் ராமேஸ்வரத்தில் அப்துல்கலாம் அவர்களுக்கு நினைவுச்சின்னம் கட்டினோம். கருணாநிதியுடன் வேலை பார்த்த திமுக சகாக்கள், திடீரென அவரது மகன் இளவரசனாக மகுடம் சூட்டி வந்ததால் மனப்புழுக்கத்தில் உள்ளனர்.

தகுதிக்கு பதவி கொடுக்காமல், உறவுக்கு பதவி கொடுக்கிறார்கள். காங்கிரஸ் சட்டப்பிரிவு 356-ஐ அதிகமுறை பயன்படுத்தி உள்ளது. திமுக உள்ளிட்டப் பல்வேறு மாநிலக் காட்சிகளை பல்வேறு முறை கலைத்துள்ளது.

இந்த அரசு அனைவருக்குமான அரசு. மோதலில் நம்பிக்கை கொண்டவர்கள் மோதிக்கொண்டே இருக்கட்டும். நாங்கள் அன்போடும், பண்போடும் இருப்போம். கடந்த ஆண்டு கோவிட் தொற்றுப் பரவலின்போது பல இந்திய மக்கள் வெளிநாடுகளில் சிக்கிக்கொண்டனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த 5 லட்சம் பேர் வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்டனர். அவர்களின் சாதி, மதத்தை நாங்கள் பார்க்கவில்லை. அனைவரையும் இந்திய மக்களாகத் தான் பார்த்தோம்.

புதிய துறைமுகம்

குமரியில் சிறந்த நீர்ப்பாசனமுறை மூலம் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறோம். வணிக சமூகங்களுக்கு நாங்கள் ஆதரவு தெரிவிக்கிறோம். பனை ஓலை பொருட்கள், கோயில் நகைகள், ஜரிகை பொருட்கள் விரைவில் பிரபலமடையப் போகிறது.

இதற்கான வேலைகள் நடந்து வருகின்றன. முந்தைய அரசு கடலோரப் பகுதியினர் குறித்து கவலைப்படவில்லை. கடலோர மேம்பாடு துறைமுகம் சார்ந்த வளர்ச்சி, உள்கட்டமைப்பு ஆகியவை மேம்படுத்தப்படும். புதிய துறைமுகம் கட்டப்படும்.

இதன்மூலம் உள்ளூர் மக்கள் அதிக வேலைவாய்ப்பு பெறுவார்கள். நீலப் பொருளாதாரத்திற்கு பெரும் முக்கியத்துவம் அளிக்கப்படும். புதிய மீன்பிடித் துறைமுகங்கள், மீன்பிடி இறங்குதளங்கள் அமைக்கப்படும்.

கடல்பாசி வளர்ப்புத் திட்டம் ஊக்கப்படுத்தப்படும். மீனவர்களின் வளர்ச்சிப்பணிக்காக 20 ஆயிரம் கோடி ஒத்துக்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்காக தனி அமைச்சகம் ஏற்படுத்தப்படும். மீனவர்களின் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும்.

இலங்கையில் கட்டுப்பாட்டில் தற்போது எந்த இந்திய மீனவரும் இல்லை. மீனவர்கள் வியாபாரத்திற்கு வழிவகை செய்யும் வகையில் புதிய சாலை வழித்தடம், நீர் வழித்தடம் அமைக்கப்படும். இதன் மூலம் மீனவர்களின் வியாபாரம் எளிதாகும்.

மீனவர்களின் வாழ்வு செழிப்படையும். பொன்.ராதாகிருஷ்ணனுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள். அவருடன்நான் நீண்ட நாட்களாக பணியாற்றியுள்ளேன். நாடாளுமன்றத்தில் உங்களின் குரலாக அவர் ஒலிப்பார்" இவ்வாறு அவர் பேசினார்.

இதையும் படிங்க: Exclusive: 'பாஜகவுக்கு எதிர்க்கட்சியாக இருக்கக்கூட தகுதி இல்லை'- திருமாவளவன் விமர்சனம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.