ETV Bharat / state

கணவர் வீட்டிற்குச் சென்ற மணப்பெண்ணிடம் பாசப் போராட்டம் நடத்திய வளர்ப்பு நாய் - பாசப் போராட்டம் நடத்திய வளர்ப்பு நாய்

நாகர்கோவிலில், திருமணம் முடிந்து கணவர் வீட்டிற்குச் சென்ற மணபெண்ணிடம் வளர்ப்பு நாய் ஒன்று பாசப் போராட்டம் நடத்திய சம்பவம் காண்போர் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Etv Bharat மணப்பெண்ணிடம் பாசப்போராட்டம் நடத்திய வளர்ப்பு நாய்

author img

By

Published : Feb 11, 2023, 6:03 PM IST

மணப்பெண்ணிடம் பாசப்போராட்டம் நடத்திய வளர்ப்பு நாய்

கன்னியாகுமரி: நாகர்கோவில் அடுத்த சித்திரை திரு மகாராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுயம்பு செல்வன். இவரது மகள் சுகப்பிரியாவின் திருமணம் கடந்த இருதினங்களுக்கு முன்பு நடைபெற்றது. சுகப்பிரியா வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார்.
அதனை குளிப்பாட்டிவிடுவது உணவு கொடுப்பது என அந்த நாய்யினை மிகுந்த பாசத்துடன் பராமரித்து வளர்த்து வந்துள்ளார்.

இந்நிலையில், சுகப்பிரியா-விற்கு திருமணம் நடைபெற்று முடிந்த அன்று மணமகன் வீட்டிற்கு சுகப்பிரியா புறப்பட்டபோது, வீட்டில் அவர் வளர்த்த நாய் இடைவிடாமல் குரைக்க தொடங்கியது. சுகப்பிரியாவை விடாமல் முன் கால்களால் பற்றி கொண்டு அங்குமிங்கும் ஓடியது.

நீண்ட நேரம் வளர்ப்பு நாயின் பாசப் போராட்டத்தை பார்த்து திருமணத்துக்கு வந்தவர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர். வளர்ப்பு நாயை விட்டு பிரிந்து செல்ல மனமில்லாமல் கனத்த இதயத்துடன் சுகப்பிரியா சென்ற வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க: Promise Day 2023: காதலர் தின வாரத்தில் சிறந்த "7" வாக்குறுதிகள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.