கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நெசவாளர் காலனியைச் சேர்ந்தவர் அசோகன் (40). இவர் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்துவருகிறார். இவரது மனைவி ஜெயந்தி (36). இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர்.
அசோகன், ஜெயந்தி தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். இந்நிலையில், நேற்று (பிப். 15) கணவன் மனைவிக்கிடையே குடும்பத் தகராறு ஏற்பட்டு முற்றியதில், அசோகன் மனைவி ஜெயந்தியைத் தாக்கியுள்ளார்.
இதில், மயக்கமடைந்த ஜெயந்தி நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று (பிப். 16) ஜெயந்தி மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து நேசமணி நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள அசோகனை தேடிவருகின்றனர். இந்தச் சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: மதுரையில் குடும்ப பிரச்னையால் மனைவி கொலை - கணவன் தப்பி ஓட்டம்