ETV Bharat / state

நாகர்கோவில் தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் 80 சவரன் நகைகள் கொள்ளை - கோட்டார் காவல் நிலையம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் பின்பக்க கதவு உடைத்து 80 சவரன் நகைகள் கொள்ளை போனது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடு புகுந்து 80 சவரன் தங்க நகைகள் கொள்ளை

author img

By

Published : Jun 27, 2022, 7:48 AM IST

கன்னியாகுமரி : நாகர்கோவில் வடலிவிளை பகுதியை சேர்ந்தவர் ஆண்டேஸ்வரன்(50). இவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். இவரது மூத்த மகன் சென்னையில் படித்து வருவதால், அவரை பார்க்க வாரம் ஒருமுறை ஆண்டேஸ்வரன் தனது மனைவி மற்றும் இளைய மகனுடன் சென்னை சென்று வருவது வழக்கம்.

அதன்படி கடந்த வெள்ளிக்கிழமை காரில் சென்னை சென்ற நிலையில், வீட்டில் வளர்க்கும் நாயை பராமரிக்க அதே பகுதியை சார்ந்த ஒருவரிடம் ஒப்படைத்துள்ளார். இன்று இரவு நாய்க்கு உணவு வைக்க வரும் போது நாய் வீட்டினுள் நின்றுள்ளது. அதனால் சந்தேகமடைந்த அப்பெண், வீட்டின் பின்பக்கம் சென்று பார்த்துள்ளார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்துள்ளது.

இது குறித்து ஆண்டேஸ்வரனுக்கும், கோட்டார் காவல் நிலையத்திற்கு தெரியப்படுத்தப்பட்டது. அதன் பேரில் அங்கு சென்ற போலீசார் விசாரணை நடத்தினர்.

வீட்டிற்கு வந்த ஆண்டேஸ்வரன் லாக்கரில் இருந்த 80 சவரன் நகைகள் கொள்ளைபோனதாக போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். வீட்டில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகள் பதிவாகும் டி.வி.ஆர்., பெட்டியையும் கொள்ளையர்கள் எடுத்து சென்றுள்ளனர்.

இதையும் படிங்க : செல்போன் கடையில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் திருட்டு - போலீஸ் விசாரணை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.