ETV Bharat / state

ஆட்டோ ஓட்டுநரின் வீட்டில் 7 சவரன் நகைகள், ரூ.35ஆயிரம் ரொக்கம் கொள்ளை!

author img

By

Published : Oct 1, 2019, 4:44 PM IST

கன்னியாகுமரி: நாகர்கோவில் அருகே ஆட்டோ டிரைவர் வீட்டின் கதவை உடைத்து ஏழு சவரன் நகைகள், ரூ.35,000 ரொக்கப்பணத்தை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

kaniyakumari

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகேயுள்ள ராமலட்சுமி நகரில் வசித்து வருபவர் நடேசன்(31). ஆட்டோ ஓட்டுநரான இவர் கடந்த ஞாயிற்றுக் கிழமை, தனது குடும்பத்துடன் உறவினர் வீட்டிற்குச் சென்றார்.

இந்நிலையில் இன்று வீடு திரும்பிய அவர், வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் உள்ளேச் சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த ஏழு சவரன் தங்க நகைகள், ரூ.35,000 ரொக்கப்பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

கொள்ளையடிக்கப்பட்ட வீடு

இதனையடுத்து அவர் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தார். மேலும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கொள்ளையர்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:

கடையின் லாக்கரை உடைத்து ரூ.15லட்சம் கொள்ளை!

Intro:கன்னியாகுமரி: குமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஆட்டோ டிரைவரின் வீட்டின் கதவு உடைத்து 7 சவரன் நகை கொள்ளை. இந்த கொள்ளை சம்பவம் குறித்து கோட்டார் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.Body:கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே தேரேகால்புதூர், ராமலட்சுமி நகரில் வசித்து வருபவர் நடேசன்(31). இவர் ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். இவரது மனைவியின் வீட்டிற்கு கடந்த ஞாயிற்றுகிழமை குடும்பத்துடன் சென்றவர் இன்று வீடுதிரும்பியுள்ளார்.
அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்த தெரிய வந்தது. வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, வீட்டில் இருந்த பீரோ திறந்த நிலையில் பொருட்கள் சிதறி கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து கோட்டார் காவல் நிலையத்திற்கு புகார் தெரிவித்துள்ளார். புகாரின் பேரில் சம்பவ இடம் சென்ற போலீசார் விசாரணை மோற்கொண்டனர். இதில் , பீரோவில் இருந்த 7 சவரன் நகைகள் மற்றும் ரூ. 35 ஆயிரம் ரூபாய் கொள்ளை போனது தெரியவந்தது.
இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த கோட்டார் போலீசார், கொள்ளையனை தீவிரமாக தேடி வருகின்றனர். ஏற்கனவே நாகர்கோவில் அருகே ஓய்வு பெற்ற காவல்துறை ஆய்வாளர் வீட்டில் பின்பக்க கதவு உடைத்து 28 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது குறிப்பிடதக்கது.
Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.