இந்திய வானிலை ஆய்வு மையம் மற்றும் தமிழ்நாடு வானிலை ஆய்வு மையம் ஆகியவற்றின் எச்சரிக்கை படி கன்னியாகுமரி மாவட்டத்தில் 20 சென்டிமீட்டர் மழை பெய்யும் எனத் தெரிகிறது.
இதனால் ஆறுகளில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடும் நிலை ஏற்படும். எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வருகை தந்துள்ளனர்.
ஒரு குழுவில் 22 பேர் வீதம் இரண்டு குழுக்கள் 44 வந்து சேர்ந்தனர். அவர்களை நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அரவிந்த் வரவேற்றதோடு மாவட்டத்தினுடைய நிலம் மற்றும் நீர் நிலைகள் குறித்து அவர்களிடம் விளக்கி கூறினார்.
இவர்கள் கிள்ளியூர், விளவங்கோடு ஆகிய இரு தாலுகா பகுதிகளுக்கும் செல்கின்றனர். இவர்கள் பாதிக்கப்பட்ட தாலுகாக்களில் முன்னெச்சரிக்கை பணிகளில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: Video: காட்டாற்று வெள்ளத்தில் சிக்கித்தவிக்கும் யானை; மீட்புப்பணிகள் தீவிரம்