கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் பகுதியைச் சேர்ந்த பாஜக இளைஞரணி மாவட்ட துணை தலைவர் பத்மகுமார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் தாயை இழிவுபடுத்தி தனது பேஸ்புக் சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனால், விடுதலை சிறுத்தை கட்சியினர் இதுகுறித்து காவல் துறையில் புகார் அளித்ததோடு பத்மகுமாரை கைது செய்ய வேண்டுமெனவும் வலியுறுத்தினர்.
புகார் அளித்தும் அவர் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பத்மகுமாரை கைது செய்யக்கோரியும், கோவையில் 17 பேர் உயிரை வாங்கிய சுவரின் உரிமையாளர் சுப்ரமணியனை கைது செய்யக் கோரியும் விடுதலைகள் சிறுத்தைகள் கட்சியினர் நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கோட்டார் காவல் துறையினர், மறியலில் ஈடுபட்ட 32 பேரை கைது செய்தனர். சாலை மறியலால் சிறிது நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: பட்டியலினத்தவருக்கு எதிரானது தமிழக அரசு - விசிக!