ETV Bharat / state

தலைக்கேறிய போதை; கத்தியுடன் போதை ஆசாமிகள் மோதல்

கன்னியாகுமரி அருகே மதுபோதையில் இருந்த 3 பேர் கத்தியுடன் ஒருவருக்கொருவர் மோதலில் ஈடுபட்டனர். அதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

போதை ஆசாமி
போதை ஆசாமி
author img

By

Published : Jun 27, 2022, 11:43 AM IST

கன்னியாகுமரி: பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள அருமனை பகுதியில், அடுத்தடுத்த இரண்டு அரசு மதுபானக் கடைகளின் பக்கத்தில் உரிய அனுமதி ஏதும் இல்லாமல் பார்கள் செயல்பட்டு வருகின்றன.

வீட்டையும் தங்களது உடல்நலனையும் மறந்து இங்கு வந்து செல்லும் குடிமகன்களில் பலரும் பலநேரங்களில், தலைக்கேறிய போதையில் சாலைகளில் தாறுமாறாக ஒருவருக்கொருவர் கட்டி புரண்டு அடி தடியில் ஈடுபடுவது வழக்கம். இந்நிலையில் நேற்று (ஜூன்26) இங்கு வந்த மதுப்பிரியர்கள் 3 பேர் மதுபோதையில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

இதனிடையே ஒருவர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஒருவரை குத்த முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது போதையில் தவழ்ந்த ஆசாமிகள் அப்பகுதியில் இருந்தவர்கள் தடுத்தும் கேட்டபாடில்லை. இதைக் கண்ட அப்பகுதி பெண்கள் அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். வெகுநேரமாக நடந்த இந்த தாக்குதல் சம்பவத்தைத் தொடரந்து, போலீசார் ஒருவர் கூட அப்பகுதிக்கு வரவில்லை என்று பொதுமக்கள் பலரும் குற்றம் சாட்டினர்.

குடிமகன்கள் கத்தியுடன் மோதல்

இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட கண்காணிப்பாளர் உடனடியாக நடவடிக்கை எடுத்து தகராறில் ஈடுபட்டவர்களை கைது செய்ய உத்தரவிட்டார். அதனடிப்படையில் கோவன்தல்விளையை சேர்ந்த டென்னிஸ்(49) மற்றும் செல்வன்(39) ஆகிய இருவரையும் கைது செய்தனர். இது போன்ற தாக்குதல்கள் தொடர்வதால் சிசிடிவில் அமைத்து பாதுகாப்பு அதிகரிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: செல்போன் கடையில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் திருட்டு - போலீஸ் விசாரணை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.