ETV Bharat / state

குமரியில் வெளி மாவட்டத்திலிருந்து வந்த 223 பேர் தனிமை!

கன்னியாகுமரி: வெளி மாவட்டங்களிலிருந்து வந்த 223 பேர் தனியார் நட்சத்திர தங்கும் விடுதியில் தங்கவைத்து அவர்களின் சளி , ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு வருகிறது.

குமரியில் வெளி மாவட்டத்தில் இருந்து வந்த 223 பேர் தனிமை

author img

By

Published : May 9, 2020, 10:51 AM IST

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. இதன் ஒரு பகுதியாக அந்தந்த மாவட்ட எல்லைகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் நேற்றிரவு முதல், இன்று காலைவரை வெளிமாவட்டத்திலிருந்து கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வந்த 223 பேர் மாவட்ட எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டு, அவர்களின் சளி மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

பரிசோதனை முடிவுகள் வரும்வரை அவர்களை கன்னியாகுமரியில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர தங்கும் விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், கோட்டாட்சியர் மயில், சுகாதாரத் துறை பணியாளர்கள் அங்கு முகாமிட்டு பணிகளை கவனித்துவருகின்றனர்.

அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள தங்கும் விடுதியைச் சுற்றி தொடர்ந்து கிருமி நாசினி தெளிக்கப்பட்டுவருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து வரும் நபர்களால் தற்போது கரோனா தொற்று எண்ணிக்கை அதிகமாகக் காணப்படுகிறது.

இந்நிலையில் சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் உள்ள நட்சத்திர விடுதிகளில் வெளிமாநில, வெளி மாவட்டத்திலிருந்து வரும் நபர்களை தங்க வைத்திருப்பது உள்ளூர்வாசிகளுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: கரோனாவால் நெல்லையில் முதல் உயிரிழப்பு

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.