ETV Bharat / state

சாலை விபத்தில் இளைஞர் உயிரிழப்பு

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையம் அருகே நேர்ந்த சாலை விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் உயிரிழந்தார்.

Road accident
Road accident
author img

By

Published : Jun 1, 2020, 4:38 PM IST

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் கச்சிபட்டை பகுதியைச் சேர்ந்த அண்ணாமலை என்பவரின் மகன் ராஜசேகர் (23). இவர் நேற்று நள்ளிரவில் வேலைக்குச் சென்றுவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்துகொண்டிருந்தார்.

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையம் அருகில் சென்று கொண்டிருந்த பொழுது பின்னால் வந்த லாரி பலமாக மோதியதில் நிலைதடுமாறி சாலையின் ஓரத்தில் உள்ள தடுப்புக் கம்பிகள் இடுப்புப் பகுதியில் குத்தப்பட்டு விபத்துக்குள்ளாகி உள்ளார்.

இதுகுறித்து உடனே தகவல் அறிந்து விரைந்து வந்த காவல் துறையினர் 108 வாகனத்தின் மூலம் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கு சென்ற சில மணி நேரத்தில் அவர் இறந்துள்ளார்.

இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் காவல் துறையினர் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தின் அருகே சாலையோரத் தடுப்புகளில் வைக்கப்பட்டுள்ள இதுபோன்ற கம்பிகளால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு, நிறைய பேர் இறந்திருப்பதாக மக்கள் கூறுகின்றனர். இதனால் கம்பிகளை அகற்றினால் உயிர் சேதம் குறையும் என்பதே மக்களின் கருத்தாக உள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.