காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த கொளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜ் (58). கூலி தொழிலாளியான இவர் பண்ருட்டி பகுதியில் வேலை செய்துவிட்டு ஸ்ரீபெரும்புதூர் - செங்கல்பட்டு சாலை வழியாக வீட்டிற்கு செல்வது வழக்கம்.
இந்நிலையில் இன்று செங்கல்பட்டிலிருந்து திருவள்ளூரை நோக்கி சென்றுகொண்டிருந்த அரசு பேருந்து, விரைவாக செல்ல வேண்டும் என்பதற்காக, ஒற்றை வழிச் சாலையில், தவறான பாதையில் சென்றுள்ளது. எதிரே வந்த வாகனத்திற்கு வழிவிடுவதற்காக, பேருந்தின் ஓட்டுநர் வாகனத்தை சாலையோரமாக இயக்கியுள்ளார். அப்போது பணி முடித்துவிட்டு சாலையோரம் நின்றுகொண்டிருந்த தேவராஜ் மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் தேவராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இனி இதுேபான்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: வாகன ஆவணங்களின் செல்லுபடி காலம் மார்ச் 31 வரை நீட்டிப்பு