காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் அருகே உள்ள பையூர் கிராமத்தில் கடந்த சில மாதங்களாகத் தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது. சுமார் ரூ. 32 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் தடுப்பணையின் பணிகள் 95 விழுக்காடு நிறைவடைந்த நிலையில் உள்ளது.
தற்போது பருவமழைத் தொடங்கியதால் உபரி நீரானது ஏரிகள் நிரம்பி, பாலாற்றுக்கு வரத்தொடங்கியது. இதனையடுத்து பாலாற்றுக்குக் குறுக்கே கட்டப்பட்டிருந்த தடுப்பணையில், தண்ணீர் சுமார் 10 அடிக்கு மேலாகத் தேக்கி வைக்கப்பட்டுள்ளதால் உபரி நீர் நிரம்பி வழிகிறது.
தடுப்பணையில் நீர் நிரம்பி வழிவதைக் காண்பதற்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் மனதிற்கு அமைதி கொடுப்பதாகப் பொதுமக்கள், விவசாயிகள் தெரிவித்துள்ளனர். தற்போது அணையைப் பார்ப்பதற்குப் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த அணையைக் கட்டியது மூலம் 30 ஆண்டுகளாகக் கடலில் கலக்கும் உபரி நீரானது, தற்போது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இதையும் படிங்க : கடல்போல காட்சியளிக்கும் பவானிசாகர் அணை!