ETV Bharat / state

பெட்ரோல் போட்ட சில நிமிடங்களில் நடுவழியில் நின்ற வாகனங்கள்! - பாரத் பெட்ரோலியம்

காஞ்சிபுரம்: எத்தனால் கலந்த பெட்ரோலுடன் தண்ணீரும் கலந்ததால் பெட்ரோல் போட்ட சில நிமிடங்களில் நடுவழியில் வாகனங்கள் நின்றுள்ளன.

bunk
bunk
author img

By

Published : Feb 23, 2021, 11:26 AM IST

நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையேற்றத்திற்கு பிறகு 10% எத்தனாலுடன் பெட்ரோல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பெட்ரோல் டேங்கில் சிறிதளவு தண்ணீர் இருந்தாலும் அது எத்தனால் பெட்ரோலுடன் கலந்து விடும் என பெட்ரோலியத்துறை சார்பில் பொதுமக்களுக்கும், பெட்ரோல் பங்க் நிர்வாகங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பாரத் பெட்ரோலிய பங்கில், நேற்றிரவு ஒருவர் தனது காருக்கு 1,000 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டுள்ளார். ஆனால், பெட்ரோல் போட்டுவிட்டுச் சென்ற ஒரு கி.மீ தூரத்திலேயே கார் நின்று விட்டது. இதேபோல் மற்றொருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் வந்து கேட்ட போது அவர்கள் முறையான பதிலளிக்காததால் வாக்குவாதம் ஏற்பட்டது.

பெட்ரோல் போட்ட சில நிமிடங்களில் நடுவழியில் நின்ற வாகனங்கள்!

இப்பிரச்சனை தொடர்பாக பெட்ரோல் பங்க் நிர்வாகியிடம் கேட்டபோது, ”தற்போது வரும் பெட்ரோல் எத்தனால் கலந்து வருவதால், வாகனத்தை கழுவும் போது பெட்ரோல் டேங்கில் தண்ணீர் படாமல் கழுவ வேண்டும். தவறுதலாக தண்ணீர் பட்டால் பெட்ரோலுடன் கலந்து வாகனங்கள் பாதி வழியிலேயே நின்று விடும்” என்றனர்.

இந்நிலையில், குறிப்பிட்ட அந்த பெட்ரோல் நிலையத்தில் பெட்ரோலியத்துறை அதிகாரிகள் வந்து ஆய்வு மேற்கொண்டனர். இருப்பினும் மறு உத்தரவு வரும் வரை பெட்ரோல் விநியோகம் செய்யத் தடை விதித்துள்ளனர்.

இதையும் படிங்க: பணம் கேட்டு பேராசிரியர்களுக்குத் தொல்லை: கல்லூரி முதல்வரை கண்டித்து போராட்டம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.