செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகேயுள்ள களத்தூர் கிராமத்தில் அருள் என்பவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் கடந்த மூன்று நாட்களாக பழைய கிணற்றை தூர்வாரும் பணி நடைபெற்றது. இதில், கிணற்றுக்குள் ஐந்து பேரும் கிணற்றுக்கு மேல்பகுதியில் ஏழு பேரும் என 12 பேர் வேலை செய்துவந்தனர்.
அப்போது, ஏற்பட்ட திடீர் மண்சரிவில் களத்தூர் கிராமத்தைச் சேர்ந்த எழிலரசு (24), விஜி (23), ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், சரவணன், மணி ஆகிய இருவர் படுகாயம் அடைந்தனர்.
படுகாயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றிய ஒரத்தி காவல் துறையினர், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சாரைப் பாம்பை வெட்டி கோயில் வேல் கம்பியில் குத்திய குடிமகன்! நடந்தது என்ன?