காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர், பிள்ளைப்பாக்கம் சிப்காட்டில் ரூ.1கோடியே 88லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய திட்ட அலுவலகத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக அக்.9 தினம் திறந்து வைத்தார்.
இந்நிலையில், முதலமைச்சர் திறந்து வைத்த இந்த அலுவலக கட்டிடத்தில் ஒரே கழிவறையில், அருகே அருகே இரண்டு வெஸ்டர்ன் கழிப்பறை அமைக்கப்பட்டுள்ள விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த சிப்காட் திட்ட அலுவலகத்திற்கு 1 கோடியே 88 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதியதாகத் திட்ட அலுவலகம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இந்தப் புதிய கட்டிடத்தைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (அக்.9) தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார்.
இந்நிலையில், இந்த புதிய திட்ட அலுவலகத்தில் உள்ள கழிவறையில், ஒரே அறையில் இரண்டு பேர் அருகருகே அமரும் வகையில் வெஸ்டர்ன் கழிப்பறை அமைக்கப்பட்டுள்ளது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திப் பேசும் பொருளாக மாறியுள்ளது.
இது குறித்து பிள்ளைப்பாக்கம் சிப்காட் திட்ட அலுவலர் கவிதா தெரிவிக்கையில், ”இந்த அலுவலகத்தில் பணிகள் இன்னும் முழுமை பெறவில்லை என்றும், இரண்டு வெஸ்டர்ன் கழிப்பறை இடையில் தடுப்புச் சுவர் ஏற்படுத்தி இரண்டு கழிவறைகளாக முழுமை பெறும்” எனத் தெரிவித்தார்.