தமிழ்நாட்டில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் ரகசியமாக கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வடமங்கலம் கிராமத்தை ஒட்டியுள்ள கருமாங்கனி ஏரியில், கடந்த சில தினங்களாகக் கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு வருவதாக ஸ்ரீபெரும்புதூர் காவல் துணை கண்காணிப்பாளர் கார்த்திகேயனுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் மாறுவேடத்தில் சென்று கள்ளச்சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்த முரளி, வினோத் மற்றும் எல்லப்பன் ஆகிய மூவரையும் மடக்கிப் பிடித்தனர்.
இதில் முரளி தப்பி ஓடிய நிலையில், வினோத், எல்லப்பன் ஆகிய இருவரை காவல்துறையினர் கைது செய்து, கள்ளச்சாராயம் காய்ச்ச வைத்திருந்த பொருட்களை பறிமுதல் செய்தனர். அதனைத் தொடர்ந்து, தப்பி ஓடிய முரளி என்பவரை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக சேகர் ரெட்டி மீது வழக்கு