ETV Bharat / state

காஞ்சி காமாட்சி அம்மனை தரிசித்த  துர்கா ஸ்டாலின்

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம் செய்தார்

துர்கா ஸ்டாலின்
துர்கா ஸ்டாலின்
author img

By

Published : Jul 14, 2021, 6:14 AM IST

உலக பிரசித்தி பெற்றதும், சக்தி பீடங்களில் முதன்மையானதுமான காஞ்சி ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயிலில், ஆஷாட நவராத்திரி உற்சவத்தில் காமாட்சி அம்மனையும், வராகி அம்மனையும் தரிசனம் செய்வது சிறப்பானது ஆகும்.

இதையறிந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், நேற்று(ஜூலை.13) காமாட்சி அம்மன் கோயிலுக்கு வருகை தந்தார்.

காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் பிரதான வாசலாக உள்ள கிழக்கு கோபுர வாசல் வழியாகத்தான் முக்கிய பிரமுகர்கள் முதல் பொது மக்கள் அனைவரும் கோயிலுக்குள் செல்கின்றனர்.

ஆனால், துர்கா ஸ்டாலின் மேற்கு கோபுர வாசல் வழியாக உள்ளே சென்று, பின்னர் பேட்டரி கார் மூலம் காமாட்சி அம்மன் மூலஸ்தானம் அமைந்துள்ள பகுதியிற்கு வந்தடைந்தார்.

காஞ்சி காமாட்சி அம்மனை தரிசித்த துர்கா ஸ்டாலின்

பின்னர், ஆஷாட நவராத்திரியை ஒட்டி சிறப்பு அலங்காரத்தில் வீணையுடன் காட்சியளித்த காமாட்சி அம்மனையும், வராகி அம்மனையும் தரிசித்து உலக நன்மை வேண்டியும், கரோனா நோய் தொற்று முற்றிலும் விலகிட வேண்டியும் துர்கா ஸ்டாலின் தீவிர இறை வழிபாட்டில் ஈடுபட்டார்.

இதுமட்டுமின்றி, கோயில் நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்ட பிரசாதங்களை சாப்பிட்டு மகிழ்ந்தார்.

முதலமைச்சரின் துணைவியார் என்ற எவ்வித ஆடம்பரமும் இன்றி எளிமையான முறையில் துர்கா ஸ்டாலின் கோயிலுக்கு வந்து தரிசனம் செய்துவிட்டு சென்றது, பக்தர்கள் இடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: 'நீட்டை எதிர்கொள்ளும் நெருக்கடிமிகு சூழல் உண்மையில் வருந்தத்தக்கதே!' - ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.