ETV Bharat / state

அத்திவரதரை தரிசிக்க முதலமைச்சர் காஞ்சி வருகை!

காஞ்சிபுரம்: தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அத்திவரதரை தரிசனம் செய்ய உள்ள நிலையில், கோயிலைச் சுற்றி கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ATHTHI VARATHA
author img

By

Published : Jul 23, 2019, 1:28 PM IST

காஞ்சிபுரத்தில் உள்ள புகழ்பெற்ற வரதராஜப்பெருமாள் திருக்கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆதி அத்திவரதர் வைபவம் 40 நாள் நடைபெறுவது வழக்கம். இம்மாதம் 1ஆம் தேதி தொடங்கி அத்திவரதரை பக்தர்கள் தரிசனம் செய்துவருகின்றனர்.

இந்நிலையில் 23ஆம் வைப நாளான இன்று காலை அத்திவரதர் இளம்பச்சை நிற பட்டு உடுத்தி மகிழும் பூமாலையுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்துவருகிறார். பக்தர்கள் வரிசையில் காத்திருந்து அத்திவரதரை தரிசனம் செய்துவருகின்றனர்.

பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் அத்திவரதர்

நடிகர் ரஜினிகாந்த், தனது குடும்பத்துடன் நேற்று மாலை அத்திவரதரை தரிசனம் செய்த நிலையில், இன்று மாலை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தரிசனம் மேற்கொள்ள உள்ளார். இதனால் திருக்கோயிலைச் சுற்றி கூடுதலாக 500-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

காஞ்சிபுரம்
முதலமைச்சர் எடப்பாடி

22ஆம் நாளான நேற்று மட்டும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். மொத்தமாக 22 நாட்களில் 31 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். இன்று மதியம் இரண்டு மணிக்கு மேல் தமிழ்நாடு முதலமைச்சர் சாமி தரிசனம் செய்ய வர இருப்பதால் காவல் துறையினர் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Intro:காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சி ஸ்ரீ ஆதி அதிக கிரி வரதரின் 23வது வைபவத்தில் இளம்பச்சை நிறம் பட்டுடுத்தி மகிழும் பூமாலையுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார் மாலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சாமி தரிசனம் மேற்கொள்ள உள்ளார் .

Body:கோவில் நகரமாம் காஞ்சிபுரத்தில் உள்ள புகழ்பெற்ற வரதராஜப்பெருமாள் திருக்கோயில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆதி அத்தி வரதர் வைபவம் 40 நாள் நடைபெறுவது வழக்கம் கடந்த 22 நாட்களாக 28 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொண்டு இந்நிலையில் 23ஆம் நாள் வைபவத்தில் காலை சுப்ரபாத சேவை உடன் எம்பெருமான் இளம்பச்சை நிற பட்டு உடுத்தி மகிழும் பூமாலையுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார் அதிகாலை லேசான சாரல் மழை உடன் பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொள்ள வரிசையில் நின்று காத்திருந்து எம்பெருமானைத் தரிசித்து வருகின்றனர் இந்நிலையில் நேற்று மாலை நடிகர் ரஜினிகாந்த் மனைவி திருமதி லதா ரஜினிகாந்த் தனது குடும்பத்துடன் சாமி தரிசனம் மேற்கொண்டார் இன்று மாலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரிசனம் மேற்கொள்ளவுள்ள நிலையில் திருக்கோயிலை சுற்றி கூடுதல் 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் இந்நிலையில் மாட வீதிகளில் சுற்றி உள்ள பொதுமக்கள் தங்களது பணிக்கு செல்ல பெருத்த சிரமமாக இருக்கின்றது

Conclusion:நேற்று 22ம் நாளன்று ஒரு லட்சத்து 50 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர் மொத்தமாக 22 நாட்களில் 31 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர் இரண்டு மணிக்கு மேல் தமிழக முதல்வர் வர இருப்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.