ETV Bharat / state

திருநீர்மலை தேர்த் திருவிழா

சென்னை: திருநீர்மலை அருள்மிகு ஸ்ரீ ரங்கநாத பெருமாள் கோயில் சித்திரை பிரம்மோற்சவத்தையொட்டி நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

therottam
author img

By

Published : Apr 25, 2019, 7:57 PM IST

சென்னை பல்லாவரத்தை அடுத்து திருநீர்மலை உள்ளது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகக் கருதப்படும் திருநீர்மலை அருள்மிகு ஸ்ரீ ரங்கநாதப் பெருமாள் கோயில் சித்திரை பிரம்மோற்சவத்தையொட்டி, திருத்தோரோட்டம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.

இந்தத் தேர் உற்சவத்தில் பெருமாள் ஸ்ரீதேவி ஸ்ரீபூதேவியுடன் தேரில் அருள்பாலித்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் கலந்துகொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் 'கோவிந்தா கோவிந்தா' என்று கோஷமிட்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

ஊர்மக்கள் திருத்தேரை வரவேற்று கற்பூர ஆரத்தி எடுத்து வழிபட்டனர். ஊர்முழுவதும் நீர், மோர் பந்தல் அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

திருநீர்மலை தேர் திருவிழா

Intro:திருநீர்மலை கோயில் தேரோட்டம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

Body:பல்லாவரத்தை அடுத்த திருநீர்மலை அருள்மிகு ஸ்ரீ ரங்கநாத பெருமாள் கோயில் சித்திரை பிரமோற்சவத்தையொட்டி நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

108 திவ்ய தேசங்களில் ஒன்றாக கருதப்படும் பழமையும் பாரம்பரியமும் மிக்க திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோயில் திருத்தேரோட்டம் இன்று காலை மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது.

திருத்தேர் உற்சவத்தில் அலங்கரிக்கப்பட்ட தேரில் நீர்வண்ணப் பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் திருநீர்மலை சுற்றி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தேரோட்டத்தில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வரும்போது எழுப்பிய கோவிந்தா கோவிந்தா என்ற கோஷம் விண்ணை முட்டியது.

ஊர் மக்கள் திருத்தேரை வரவேற்று கற்பூர ஆரத்தி எடுத்து வழிபட்டனர்.

சித்திரை மாத பிரம்மோற்சவத்தின் சிறப்பம்சமான நீர் மோர் பந்தல் ஊர் முழுவதும் அமைக்கப்பட்டு பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் நீர்மோர் வழங்கப்பட்டது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.