காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் 40 இடங்களில் கரோனா இலவச சிறப்பு தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது.
இதனிடையே தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக கடந்த ஒரு வாரமாக அனைத்து சிறப்பு தடுப்பூசி முகாம்களும் ரத்து செய்யப்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மட்டும் குறைந்த எண்ணிக்கையிலே தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தன.
இந்நிலையில் நேற்று சென்னையில் இருந்து காஞ்சிபுரத்துக்கு 38 ஆயிரம் தடுப்பூசிகள் வந்தடைந்தன. அதனையடுத்து இன்றுமுதல் மீண்டும் 28 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 40 கரோனா இலவச சிறப்பு தடுப்பூசி முகாம்களில் ஒரு வாரம் இடைவெளிக்குப் பிறகு தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
![காஞ்சிபுரத்துக்கு வந்தடைந்த 38 ஆயிரம் தடுப்பூசிகள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/04:17:25:1623494845_tn-kpm-04-corona-vaccination-camp-started-pic-vis-script-tn10033_12062021135734_1206f_1623486454_2.jpg)