காஞ்சிபுரம் : ஸ்ரீபெரும்புதூர் அருகே கரசங்கால் எல்ஐசி நகரில் வசித்து வருபவர் மருத்துவர் பால் (67). இவரது இரண்டாவது மனைவி சசிகலா. முதல் மனைவியை பிரிந்து வாழும் பால் சசிகலா தம்பதிக்கு ஸ்ரீதேவி (50) என்கிற மகள் உள்ளார்.
இந்நிலையில் நேற்று மருத்துவர் பால் வேலைக்கு சென்ற நிலையில் மனைவி சசிகலாவும் மற்றும் மகளும் வெளியூர் சென்றுவிட்டு வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியுற்று உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 100 சவரன் நகை காணாமல் போயிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து மணிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து அங்கு சென்ற கொள்ளை குறித்து விசாரணை நடத்தினர். போலீசார் கொள்ளை சம்பவம் அரங்கேறிய வீட்டினை சோதனையிட்டனர். அப்போது மருத்துவரின் முதல் மனைவிக்கும், இரண்டாவது மணைவி சசிகலாவிற்கும் கடந்த சில தினங்களாக தகராறு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அதன் அடிப்பையில் உறவினர்கள் நெருங்கிய நண்பர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் வீட்டின் அருகில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து மருத்துவர் பால் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க : சீரியல் பார்த்துக்கொண்டிருந்த மூதாட்டியிடம் செயின் பறிப்பு