காஞ்சிபுரம்: சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், காஞ்சிபுரம் அருகே ராஜகுளம் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த 2 லாரிகள் போட்டிப் போட்டுக்கொண்டு ஒன்றோடு ஒன்று முந்திச் செல்ல முயன்றபோது, இரண்டு லாரிகளும் உரசிக் கொண்டன. இதனையடுத்து லாரியை சாலையோரம் நிறுத்தி வைத்தனர்.
இந்நிலையில், நின்றுகொண்டிருந்த லாரியின் பேட்டரி பகுதியில் திடீரென மின்கசிவு ஏற்பட்டு, லாரி திடீரென தீப்பற்றி எரிந்தது. இதுகுறித்து தகவலறிந்து வந்த காஞ்சிபுரம் தீயணைப்பு வீரர்கள், லாரியில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில், லாரியின் முன்பக்கம் முழுவதுமாக எரிந்து நாசமானது. இதுகுறித்து தாலுகா காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்துவதை தடுக்க வேண்டும்!