ETV Bharat / state

ஜாதி சான்றிதழ் கேட்டு தற்கொலை செய்த வேல்முருகன் ; ஆட்சியரிடம் தாயார் மனு

ஜாதி சான்றிதழ் கேட்டு தற்கொலை செய்துகொண்ட வேல்முருகனின் தாயார் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தார்.

ஜாதி சான்றிதழ் கேட்டு தற்கொலை செய்த வேல்முருகன்... ஆட்சியரிடம் தாயார் மனு

author img

By

Published : Oct 15, 2022, 2:39 PM IST

Updated : Oct 15, 2022, 6:33 PM IST

காஞ்சிபுரம்: ஜாதி சான்றிதழ் கேட்ட நிலையில் அரசுத்துறை அதிகாரிகள் தன்னை அலட்சியப்படுத்தி அலைக்கழிப்பதால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட குறவர் இனத்தை சேர்ந்த வேல்முருகனின் குடும்பத்தினர் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் தாலுக்கா படப்பை சிறுமாத்தூர் காலனியைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவர் பழங்குடி இனத்தைச் சார்ந்தவர் என ஜாதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பத்திருந்த இருந்த நிலையில் தன்னை அரசுத்துதை அதிகாரிகள் அலைக்கழிப்பதாக கூறி கடந்த இரு தினங்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

இச்சம்பவம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டு தமிழக அரசு இதி குறித்தான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.மேலும் இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி இரு வாரங்களுக்குள் தெரிவிக்குமாறும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் தற்கொலை செய்துக்கொண்டு உயிரிழந்த வேல்முருகனின் உடல் நேற்று(அக்.14) காலை தகனம் செய்யப்பட்ட நிலையில், வேல்முருகனின் மனைவி சித்ரா(37), மகன் பிரிதிவி ரூபன்(15), மகள்கள் பிரதிபா(8), பிரியங்கா(6), வேல்முருகனின் தாயார் மற்றும் உறவினர்கள், பல்வேறு கட்சி நிர்வாகிகளுடன் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தியை நேரில்.சந்திக்க நேற்று மாலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர்.

வேல்முருகன் குடும்பத்தினுடன் வந்த பல்வேறு கட்சி நிர்வாகிகளும் மாவட்ட ஆட்சியரை சந்திக்க முற்பட்ட போது அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்ட வாக்குவாதத்தால் வேல்முருகனின் மனைவி சித்ரா மற்றும் அவரது 3 குழந்தைகள் மற்றும் ஒரு சில அரசியல் கட்சியினர் மட்டுமே காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

அப்போது இது தொடர்பாக வேல்முருகனின் தாயாரும் மாவட்ட ஆட்சியரை சந்திக்க முற்பட்ட போது போலீசார் அதற்கு அனுமதி மறுத்தனர். இதனால் அதிருப்தி அடைந்த வேல் முருகனின் தாயார் மாவட்ட ஆட்சியரை சந்திக்காமல் அங்கிருந்த போவதில்லை என முடிவெடுத்த நிலையில் மாவட்ட ஆட்சியரின் அறையின் முன்பாக ஓர் ஓரத்தில் தரையில் அமர்ந்து கொண்டு காத்திருந்தார்.

பின்னர் ஒரு கட்டத்தில் மீண்டும் பல நிமிடங்கள் மாவட்ட ஆட்சியரின் அறைக்கு முன்னரே காத்திருந்தும் அவரை சந்திக்க அனுமதிக் கிடைத்தவுடன் தான் உள்ளே அனுப்புவோம் என மாவட்ட ஆட்சியர் உதவியாளரும், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரும் தெரிவித்த வேளையில் மீண்டும் சிறிது நிமிடங்கள் காத்திருந்து அதன் பின் அனுமதி கிடைத்தபின்னரே அவர் உள்ளே அனுமதிக்கப்பட்டார்.

ஜாதி சான்றிதழ் கேட்டு தற்கொலை செய்த வேல்முருகன் ; தாயாரை தரையில் அமர வைத்ததால் சர்ச்சை

மேலும் வேல்முருகன் குடும்பத்தினரின் இந்த கோரிக்கைகளை அரசுடன் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி உறுதி அளித்தார்.இதைத்தொடர்ந்து வேல்முருகன் மனைவி சித்ரா தனது குழந்தைகள் மற்றும் குடும்பத்தார் ,உறவினர்களை அழைத்துக் கொண்டு சென்றார்.மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்குள் இது சம்பந்தமாக பல்வேறு கட்சியின் நிர்வாகிகளும் வந்ததை தொடர்ந்து ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பும் ஏற்பட்டது. மேலும் இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த வனவேங்கைகள் கட்சி தலைவர் இரணியன் தெரிவிக்கையில்,
ஜாதி சான்றிதழ் கேட்டு தற்கொலை செய்த வேல்முருகன்... ஆட்சியரிடம் தாயார் மனு
ஜாதி சான்றிதழ் கேட்டு தற்கொலை செய்த வேல்முருகன்... ஆட்சியரிடம் தாயார் மனு

இவ்விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியரை சந்திக்க வந்த வேல்முருகனின் தாயாரை கூட வெளியில் நிற்கவைத்து அரசுத்துறை அதிகாரிகள் வஞ்சித்துள்ளனர்,இன்னும் தொடர்ச்சியாகவே பழங்குடியின மக்கள் வைக்கும் கோரிக்கையை அரசுத்துறை அதிகாரிகளும், காவல்துறையும் புறக்கணிப்பது தொடர் வாடிக்கையாகவே உள்ளது மிகுந்த வேதனையளிக்கின்றது குற்றம்சாட்டிய அவர்,

உயர் நீதிமன்றத்தில் மலைகுறவர்கள் ஜாதி சான்றிதழ் கேட்டு தீக்குளித்து உயிரிழந்த வேல்முருகன் விவகாரத்தில் உயர் நீதிமன்றத்தில் வேல்முருகன் பட்டியலினத்தை சார்ந்தவர் என்பதால் பழங்குடியினர் சான்றிதழ் சான்று கோரிய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்து விளக்கம் அளித்துள்ளது,

இதற்கு கண்டனம் தெரிவித்து வனவேங்கை கட்சி சார்பில் தமிழக முழுவதும் மாநிலம் தழுவிய போராட்டத்தை முன்எடுக்க போவதாகவும், உண்ணாவிரத போராட்டத்தையும் துவங்கப் போவதாகவும் வனவேங்கைகள் கட்சி தலைவர் இரணியன் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் ரோகித் சர்மா ரசிகர் கொலை... விராட் கோலியை கைது செய்யுங்க... ட்விட்டரில் கிளம்பிய சர்ச்சை...

Last Updated : Oct 15, 2022, 6:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.