காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே மேவளூர்குப்பம் வணிக வீதியில் முன்னாராம் என்பவருக்குச் சொந்தமான நகை அடகுக்கடை செயல்பட்டு வருகிறது. அந்த அடகுக்கடைக்கு வந்த அடையாளம் தெரியாத நபர், காவல் துறை எனக் கூறி, நகைகளை வாங்குவதற்கு விவரங்களைக் கேட்டுள்ளார்.
இதையடுத்து கடை உரிமையாளர் தங்க நகை, தங்க வளையல், தங்க மோதிரம் என 15 சவரன் நகைகளைக் காட்டியுள்ளார். இதனை புகைப்படம் எடுத்துவிட்டுத் தருவதாக வாங்கிய, அந்த நபர் பின்னால் உள்ள இருக்கையில் உட்கார்ந்துள்ளார். சிறிது நேரத்தில் அவரைப் பின் தொடர்ந்து, வந்த மற்றொரு நபர் கடை உரிமையாளரிடம் பேச்சு கொடுத்து வந்துள்ளார்.
இதனைப் பயன்படுத்தி பின்னால் இருந்த நபர் 15 சவரன் நகைகளுடன், அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இதனை அடுத்து கடை உரிமையாளர் முன்னாராம் அளித்தப் புகாரின் பேரில், வழக்குப் பதிவுசெய்த ஸ்ரீபெரும்புதூர் காவல் துறையினர் அடகு கடையில் உள்ள சிசிடிவியில் பதிவான காட்சிகளை கையகப்படுத்தி, நகைகளைத் திருடிச்சென்ற நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: வங்கி அலுவலர் எனக் கூறி பணம், நகை மோசடியில் ஈடுபட்ட பெண் கைது