ETV Bharat / state

CCTV:செல்போன் கடை பூட்டை உடைத்து செல்போனைத்திருடும் இளைஞர் கைது!

ஸ்ரீபெரும்புதூரில் செல்போன் கடையின் பூட்டை உடைத்து செல்போன்களை திருடிய இளைஞரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், இது தொடர்பான சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

CCTV: செல்போன்கடை பூட்டை உடைத்து செல்போன் திருடும் வாலிபர்...!

author img

By

Published : Nov 8, 2022, 6:11 PM IST

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் கோயில் நகரைச்சேர்ந்தவர், ஸ்டீபன் எபினேசர். இவர் ஸ்ரீபெரும்புதூர் தேரடி அருகே செல்போன் கடை ஒன்று சொந்தமாக நடத்தி வருகிறார்.

இந்நிலையில், கடந்த மாதம் 29ஆம் தேதி இரவு கடையைப் பூட்டி விட்டுச்சென்றுள்ளார். அடுத்த நாள் காலையில் கடைக்கு வந்து பார்த்த பொழுது பூட்டு உடைக்கப்பட்டு பத்துக்கும் மேற்பட்ட செல்போன்கள் மற்றும் ஐயாயிரம் ரூபாய் ரொக்கப்பணம் திருடு போயிருந்தது தெரியவந்தது.

உடனே கடையில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து பார்த்தபொழுது செல்போன் திருடன், செல்போன் கடையின் பூட்டை உடைத்து விட்டு, உள்ளே வந்து திருடுவதற்கு முன்னர் சிசிடிவி கேமராவை உடைத்துள்ளது தெரியவந்துள்ளது. அப்பொழுது திருடிய நபரின் முகம் பதிவாகியுள்ளது. உடனே ஸ்டீபன் எபினேசர் சிசிடிவி பதிவுடன் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

சிசிடிவி: செல்போன்கடை பூட்டை உடைத்து செல்போன் திருடும் வாலிபர்...!
CCTV:செல்போன் கடை பூட்டை உடைத்து செல்போனைத்திருடும் இளைஞர் கைது!

அப்புகாரின் அடிப்படையில் ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் தனிப்படை அமைத்து திருடனைத் தேடி வந்த நிலையில், சென்னை நெற்குன்றம் பகுதியைச்சேர்ந்த யுவராஜ் (எ)சூர்யா(21) என்பது தெரியவந்தது. உடனே நெற்குன்றம் விரைந்து சென்ற ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் யுவராஜ்(எ)சூர்யாவை கைது செய்து செல்போன்களை பறிமுதல் செய்து யுவராஜ்(எ)சூர்யாவை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் யுவராஜ்(எ)சூர்யா மீது பல்வேறு காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இது தொடர்பான சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.

இதையும் படிங்க: நூதன முறையில் ஆன்லைன் ஆப் மூலம் கடன் பெற்று மோசடி ...பாதிக்கப்பட்டவர்கள் புகார்..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.