காஞ்சிபுரம்: நாடுமுழுவதிலும் கரோனா இரண்டாம் அலை அதிகரித்துவந்த நிலையில், அதனைக் குறைக்கும் பொருட்டு பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது.
அந்தவகையில் தமிழ்நாடு முழுவதிலும் நோய்த் தொற்றினை குறைப்பதற்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, கடந்த மே மாதம் 10ஆம் தேதி முதல், அதிக மக்கள்கூடும் தேநீர்க் கடைகள் செயல்படக் கூடாது எனத் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது.
நோய்த் தொற்று குறையத் தொடங்கியதை அடுத்து தமிழ்நாடு முழுவது இன்று (ஜூன் 14) முதல் ஊரடங்கு உத்தரவில் கூடுதல் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறிய தேநீர்க் கடை வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று தேநீர்க் கடைகளை சில கட்டுப்பாடுகளுடன் திறக்கக்கலாம் எனத் தமிழநாடு முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் காலை 6 மணிமுதலே டீக்கடைகள் திறக்கப்பட்டன. தேநீர்க் கடைகளில் அமர்ந்து தேநீர் குடித்தவாறு தினசரி நாளிதழ்களைப் படித்துவிட்டு செல்வது பொதுமக்களின் வழக்கம். ஆனால் தேநீர்க் கடைகளில் பார்சலுக்கு மட்டும் அனுமதி என அரசு அறிவித்ததால், தேநீர்க் கடைகள் கூட்டம் இன்றி காணப்படுகிறது.
இதையும் படிங்க: மக்களின் ஒத்துழைப்பால் கரோனா தொற்று குறைவு: மு.க.ஸ்டாலின்