ETV Bharat / state

சிறுமி டான்யாவிற்கு முகச்சிதைவு அறுவை சிகிச்சை...10 பேர் கொண்ட மருத்துவ குழுவினரால் 8 மணி நேர சிகிச்சை.... - மிகஅரிய வகையான முகச்சிதைவு

காஞ்சிபுரம் அருகே தனியார் மருத்துவமனையில் முகச்சிதைவு அறுவை சிகிச்சைக்காக சிகிச்சை பெற்று வரும், சிறுமி டான்யாவிற்கு 10 பேர் கொண்ட மருத்துவ குழுவினரால் 8 மணி நேர முகச்சிதைவு சிகிச்சை காலை 8 மணிக்கு தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

சிறுமி டான்யாவிற்கு முகச்சிதைவு அறுவை சிகிச்சை...10 பேர் கொண்ட மருத்துவ குழுவினரால் 8 மணி நேர சிகிச்சை....

author img

By

Published : Aug 23, 2022, 1:57 PM IST

காஞ்சிபுரம்: திருவள்ளூர் மாவட்டம் ஆவடி வீராபுரம் ஶ்ரீ வாரி நகர் பகுதியை சேர்ந்தவர்கள், ஸ்டீபன்ராஜ் - சௌபாக்யா தம்பதியினர். இவர்களுக்கு கடந்த 2012ம் ஆண்டு திருமணமாகி ஒரு மகள், மகன் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்களின் மூத்த மகள் டானியாவுக்கு ஒன்பது வயதாகிறது. டானியா வீராபுரம் அரசினர் பள்ளியில் நான்காம் வகுப்பு பயின்று வருகிறார்.

சிறுமி டானியா மிக அரிய வகையான முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு ஒரு பக்க கண்ணம் முழுவதும் சிதைந்த நிலையில் அவதிப்பட்டு வந்தார். இதனால் பள்ளி படிப்பை தொடர முடியாமல் அவதி அடைவது குறித்து ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த தமிழ்நாடு முதல்மைச்சர் மு.க.ஸ்டாலின், அவருக்கு தேவையான அனைத்து உதவிகளும் தமிழ்நாடு அரசு மூலம் செய்து தரப்படும் என கூறியிருந்தார்.

சிறுமி டான்யாவிற்கு முகச்சிதைவு அறுவை சிகிச்சை...10 பேர் கொண்ட மருத்துவ குழுவினரால் 8 மணி நேர சிகிச்சை....
சிறுமி டான்யாவிற்கு தைரியம் கூறும் அமைச்சர் சாமு நாசர்

அதனையடுத்து காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்புதூர் அருகே தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் முகச்சிதைவு அறுவை சிகிச்சைக்காக சிறுமி டானியா அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் சிறுமி டானியாவை தமிழ்நாடு முதல்மைச்சரின் ஆணைக்கிணங்க தமிழ்நாடு பால்வளத் துறை அமைச்சர் நாசர் மருத்துவமனைக்கு வந்து சிறுமியின் நலம் குறித்து விசாரித்தார்.

இந்நிலையில், சிறுமி டானியாவிற்கு 10 பேர் கொண்ட மருத்துவ குழுவினரால், முகச்சிதைவு அறுவை சிகிச்சையை இன்று காலை 8 மணிக்கு தொடங்கினர். தொடர்ந்து தற்போது அறுவை சிகிச்சை நடைபெற்று வருகிறது.

பேரிரொம்போக் என்னும் இந்த நோய் உலகத்திலேயே இரண்டரை லட்சம் பேரில் ஒருவருக்கு தான் சிறிய அளவில் பாதிப்பு ஏற்படுத்தும். அதுவும் வயதில் பெரியவர்களுக்கு தான் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், ஆனால் சிறுமி டான்யா முகச்சிதைவால் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு சுமார் 8 மணிநேர அறுவை சிகிச்சை இன்று நடைபெறுகிறது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்தியாவிலேயே முதன்முறையாக சிறுமி ஒருவருக்கு முகைச்சிதைவு அறுவைசிகிச்சை நடைபெறவுள்ளதாகவும் மருத்துவர்கள் குழு தெரிவித்துள்ளனர்.

சிறுமி டான்யாவை அறுவை சிகிச்சை அறைக்கு அழைத்து சென்ற அமைச்சர் நாசர்

மேலும், அறுவை சிகிச்சைக்கு முன்பு சிறுமி டானியாவுக்கு, அமைச்சர் நாசர் நேரில் வந்து தைரியம் கூறி அறுவை சிகிச்சை அறைக்கு அனுப்பி வைத்தார். அதன் பின், அமைச்சர் நாசர் செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறுகையில்,"விளிம்பின் நுனியில் இருக்கின்ற ஏழைக் குழந்தையின் அந்த அழு குரலை கேட்டு தமிழ்நாடு முதலமைச்சர் உடனுக்குடன் அந்த அழுகுரலை களைய வேண்டும் என்பதற்காக மருத்துவ சோதனையின் அடிப்படையில் சிதைந்து இருக்கின்ற முகத்தை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.

உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தது மட்டுமின்றி அதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் குழந்தைக்கு செய்ய வேண்டி முகம் மீண்டும் இயல்பு நிலைமைக்கு வர வேண்டும் என்ற உணர்வின் அடிப்படையில் எப்படி எல்லாம் செய்ய வேண்டுமோ, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, இன்றைய தினம் தற்போது மருத்துவ அறுவை சிகிச்சைக்காக உள்ளே அழைத்து செல்லப்பட்டு இருக்கிறார்.

அமைச்சர் நாசர் செய்தியாளர் சந்திப்பு

ஏறக்குறைய இந்த அறுவை சிகிச்சையானது ஒன்பது மணி நேரம் நடைபெறும். சிகிச்சைக்கு பின் டானியா பழைய நிலைக்கு மீண்டுவந்து, சமுதாயத்தில், பள்ளி மாணவர்களிடம் இருந்தும், சாலையில் இருக்கக்கூடிய அக்கம்பக்கம், எதிர் வீட்டில் இருந்தும், புறந்தள்ளப்பட்டு சமுதாயத்தில் ஒதுக்கப்பட்ட அந்த குழந்தையை மீண்டும் இயல்பு நிலைக்கு வருகின்ற சூழல் உருவாக்குவதற்காக முதலமைச்சர் முயற்சி எடுத்து உள்ளார். தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி" என்றனர்.

இதையும் படிங்க: ’இன்னும் நிறைய சம்பவங்கள் காத்திருக்கு..!’ - முதலமைச்சர் அதிரடி ட்வீட்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.