காஞ்சிபுரம்: உலக பிரசித்திப்பெற்ற காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்மன் கோயிலில் இன்று (ஏப்.10) ராமநவமி பண்டிகை மற்றும் சித்திரை நவராத்திரி நிறைவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், தெலுங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொண்டு காமாட்சி அம்மனை தரிசனம் செய்தார். முன்னதாக கோயிலுக்கு வந்த அவரை காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட ஆட்சியர் எம். ஆர்த்தி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன், “அனைவருக்கும் ராமநவமி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கவேண்டும். எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். நல்ல உடல்நலத்துடன் இருக்கவேண்டும். கரோனா குறைந்து இருந்தாலும் முழுவதுமாக கரோனா விலகவில்லை.
ஆகையால், அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். யாரெல்லாம் தடுப்பூசி போடவில்லையோ அவர்களெல்லாம் நிச்சயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். அனைவரும் பொது இடங்கள் மற்றும் கூட்டமுள்ள இடங்களிலும் கண்டிப்பாக முகக்கவசங்களை அணிய வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: கல்லூரி தேர்வுக் கட்டண உயர்வை திமுக திரும்பப் பெற வேண்டும் - ஓபிஎஸ்