காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தண்டலம் அடுத்த தனியார் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் 35 அடி உயரம் கொண்ட பாலமுருகன் கோயில் உள்ளது. இக்கோயிலில் நன்னீராட்டு விழா இன்று (மார்ச் 31) வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டார். அவருக்கு காவல் துறையினரின் அணிவகுப்புடன் கூடிய மரியாதை அளிக்கப்பட்டது.
பின்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது, "நாளை முதல் 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது. அப்போது நானும் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வேன்.
அதேபோல் நீங்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் மட்டும் போதாது. கரோனா தடுப்பு வழிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: 45 வயதிலிருந்து 59 வயதுக்குள்பட்ட இணை நோய் இல்லாதவர்களுக்கு தடுப்பூசி!