ETV Bharat / state

திருக்கழுக்குன்றத்தில் தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம் தொடக்கம்

author img

By

Published : Jan 3, 2020, 4:45 PM IST

செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றத்தில் இன்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் தலைமையில் தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம் தொடங்கப்பட்டது.

meeting
meeting

திருக்கழுக்குன்றத்தில் இன்று தமிழ்நாடு ஊராக புத்தாக்கத் திட்டம் தொடங்கப்பட்டது. இதனை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் தொடங்கிவைத்தார். இந்தத் திட்டமானது தமிழ்நாட்டின் 26 மாவட்டங்களில், 120 வட்டங்களில், 3 ஆயிரத்து 994 ஊராட்சிகளில் இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்படும்.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 5 வட்டாரங்களில், 220 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட உள்ளது. இதில் செங்கல்பட்டு மாவட்டத்தில் மூன்று வட்டங்களில் 119 ஊராட்சிகளிலும், திருக்கழுக்குன்றத்தில் 54 ஊராட்சிகள், திருப்போரூரில் 50 ஊராட்சிகள், புனித தோமையர் மலை 15 ஊராட்சிகள், காஞ்சிபுரத்தில் 2 வட்டாரங்களில் 101 ஊராட்சிகள், வாலாஜாபாத்தில் 16 ஊராட்சிகள் ஆகிய ஊராட்சிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம் தொடக்க நிகழ்ச்சி

முதல்கட்டமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் இத்திட்டம் தொடங்கப்பட்டது. மீதமுள்ள 4 வட்டங்களில் இரண்டாவது கட்டமாக செயல்படுத்தப்படும். தமிழ்நாட்டில் இத்திட்டத்தின் மூலம் 4 லட்சத்து 11 ஆயிரத்து 620 நேரடி பயனாளிகள் பயன்பெறுவர்.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் உத்தேசமாக மொத்தம் 17 ஆயிரத்து 120 பயனாளிகள் நேரடியாக பயன்பெறுவர். புத்தாக்கத் திட்டம் தொடங்க விழாவில் கிராமம் வாரியாக சுமார் 500க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: CAA சட்டத்தை எதிர்த்து ரயில் நிலையத்தை முற்றுகையிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாணவரணி!

Intro:திருக்கழுக்குன்றத்தில் இன்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் தலைமையில் புதிதாக தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம் துவங்கப்பட்டது .

Body:செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் என்று தமிழ்நாடு ஊராக புத்தகத் திட்டம் துவங்கப்பட்டது இத்திட்டமானது தமிழகத்தின் 26 மாவட்டங்களில் 120 வட்டங்களில் 3994 ஊராட்சிகளில் இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்படும் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் 5 வட்டாரங்களில் 220 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட உள்ளது இதில் செங்கல்பட்டு மாவட்டத்தில் மூன்று வட்டங்களில் 119 ஊராட்சிகளிலும் திருக்கழுக்குன்றம் 54 ஊராட்சிகள் திருப்போரூர் 50 ஊராட்சியில் புனித தோமையர் மலை 15 ஊராட்சிகள் மற்றும் காஞ்சிபுரத்தில் 2 வட்டாரங்களில் 101 ஊராட்சிகள் வாலாஜாபாத்தில் 16 ஊராட்சிகள் ஆகிய ஊராட்சிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது இதில் முதல்கட்டமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருக்கழுக்குன்றத்தில் துவங்கப்பட்டது மீதமுள்ள 4 வட்டங்களில் இரண்டாவது கட்டமாக செயல்படுத்தப்படும்.

Conclusion:தமிழகத்தில் இத்திட்டத்தின் மூலம் 4 லட்சத்து 11 ஆயிரத்து 620 நேரடி பயனாளிகள் பயன்பெறுவர் இதில் காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டத்தில் உத்தேசமாக மொத்தம் 17 ஆயிரத்து 120 பயனாளிகள் நேரடியாக பயன்பெறுவர் இத்தகைய பயனுள்ள திட்டத்தினை மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் இன்று துவக்கி வைத்தார் மேலும் இத்திட்டத்தில் கிராமம் வாரியாக சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்ப பெண்கள் கலந்து கொண்டனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.