ETV Bharat / state

டெங்கு காய்ச்சலால் மாணவி உயிரிழப்பு

author img

By

Published : Sep 26, 2019, 8:01 PM IST

காஞ்சிபுரம்: மாங்காடு அருகே 9 ஆம் வகுப்பு மாணவி டெங்கு காய்ச்சலால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டெங்கு காய்ச்சலால் மாணவி பரிதாபமாக உயிரிழப்பு

காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு அருகே ராமகிருஷ்ணபுரம் பகுதியை சேர்ந்தவர் குட்டி. இவருடைய மகள் பிருத்திக்கா அரசு உயர்நிலைப்பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்துவந்தார். இந்நிலையில் பிருத்திக்கா கடந்த ஒரு வார காலமாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இதையடுத்து அவரது பெற்றோர் அருகே உள்ள தனியார் மருத்துவமதனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர் காய்ச்சல் தீவிரமானதையடுத்து நேற்று சிகிச்சைகாக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

டெங்கு காய்ச்சலால் மாணவி பரிதாபமாக உயிரிழப்பு

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பல்லி விழுந்த குளிர்பானத்தை அருந்திய சிறுமிக்கு தீவிர சிகிச்சை

Intro:காஞ்சிபுரம் மாவட்டம்,மாங்காடு பேரூராட்சின் அலட்சியதால் 9 ஆம் வகுப்பு மாணவி டெங்கு காய்ச்சலால் உயிர் இழந்துள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Body:காஞ்சிபுரம் மாவட்டம் ,மாங்காடு பேரூராட்சிக்கு உட்பட்ட 15வது வார்டு ராமகிருஷ்ணபுரம் பகுதியை சேர்ந்தவர் குட்டி/45.ஆட்டோ ஓட்டுனரான இவருக்கு மூன்று பெண் மகள்கள் உள்ளனர். இதில் இரண்டாவது மகள் பிருத்திக்கா/11 மாங்காடு அரசு உயர்நிலைப்பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் பிருத்திக்கா கடந்த ஒரு வார காலமாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதையடுத்து அவரது பெற்றோர் அருகே உள்ள தனியார் மருத்துவமதனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.காய்ச்சல் தீவிரமானதை அடுத்து நேற்று சிகிச்சைகாக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி பரிதாபமாக உயிர் இழந்தார்.இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும்,அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.Conclusion:இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் மாங்காடு பேரூராட்சியில் எங்கு பார்த்தாலும் சுகாதார சீர் கேடு நிலவி வருகிறது.ராமகிருஷ்ணபுரம் அருகே உள்ள குப்பை கிடங்கில் பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் பல டன் குப்பைகள் தேக்கி வைக்கப்பட்டு உள்ளது.இதனால் அங்கு பலவித நோய்கள் பரவி வருவதாக தெரிவித்த மக்கள் இது குறித்து பல முறை புகார் அளித்தும் மாங்காடு பேரூராட்சி எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் மாணவி உயிர் இழப்புக்கு மாங்காடு பேரூராட்சி காரணம் என குற்றம்சாட்டியுள்ளனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.