ETV Bharat / state

அரசு நிலம் ஆக்கிரமிப்பு: கிராமமக்கள் சாலை மறியல்! - அரசுக்கு சொந்தமான நிலத்தில் தனிநபர் சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு

செங்கல்பட்டு: மதுராந்தகம் அருகே அரசுக்குச் சொந்தமான நிலத்தில் தனிநபர் சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

road strike at chengalpattu
road strike at chengalpattu
author img

By

Published : Jan 20, 2020, 6:01 PM IST

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகேயுள்ள பழம்புத்தூர் கிராமத்தில் பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான ஏரிக்கரை நிலத்தை தனிநபர் ஒருவர், அவரது பட்டா நிலத்திற்கு செல்ல நீண்ட நாட்களாக இரவு நேரங்களில் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் பாதை அமைக்க முற்பட்டுள்ளார்.

இதுகுறித்து அக்கிராம மக்கள் சம்பந்தபட்ட அனைத்து அரசு அலுவலகர்களிடமும் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்துவந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கிராமமக்கள் 50க்கும் மேற்பட்டோர் புக்கத்துறை சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்

கிராமமக்கள் சாலை மறியல்

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், இதுகுறித்து அலுவலர்களிடம் முறையிட்டு நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால் தேசிய நெடுஞ்சாலையில் அரைமணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிப்படைந்தது.

இதையும் படிங்க: சாலை விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு...

Intro:புக்கத்துறையில் தேசிய நெடுஞ்சாலையில் ஏரி இடத்தை தனிநபர் ஆக்கிரமித்து சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல்

Body:செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள பழம்புத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரிக்கரையை தனிநபர் ஆக்கிரமைப்பு செய்து அவரது பட்டா இடத்திற்கு சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு இரவு நேரத்தில் ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு பாதை அமைத்தனத
கிராம மக்கள் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக எதிர்ப்பு தெரிவித்து
மாவட்ட ஆட்சியர்
வருவாய் கோட்டாட்சியர் வட்டாட்சியர் என அனைத்து அலுவலக அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் தனிநபர்கள் மீது
படாளம் காவல் நிலையத்தில் புகாரும் அளிக்கப்பட்டு
நீண்ட நாட்களாக இந்த பிரச்சனை இருந்து வந்தது நேற்று இரவோடு இரவாக ஏரிக்கரையை ஜேசிபி இயந்திரம் மூலம் சமன் செய்து தனது சொந்த இடத்திற்கு சாலை அமைக்கும் பணியை ஈடுபட்டுள்ளனர் இதனால் இன்று ஆத்திரமடைந்த பழம்புத்தூர் கிராம மக்கள் புக்கத்துறை என்ற இடத்தில்
சென்னை To
திருச்சி
தேசிய நெடுஞ்சாலையில் 50க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இந்த வழி பிரச்சினைக்காக அதிகாரிகளிடம் முறையிட்டு நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது Conclusion:சுமார் அரை மணி நேரம்
சென்னை To திருச்சி
தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து . பாதிக்கப்பட்டது
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.